-
பொதுத் தேர்வு எழுதவிருக்கும் 11 – 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு - டாக்டர் பாரிவேந்தர் வாழ்த்து -
நாளை - 2018 மார்ச் 1-ம் தேதி 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வும், 7-ஆம் தேதி 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் நடைபெற உள்ளது. மாணவர்களின் வாழ்க்கையில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது ஒரு திருப்புமுனையாகும். அவர்களின் எதிர்கால வாழ்க்கையே, இந்த தேர்வில் அவர்கள் எடுக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில்தான் அமைய உள்ளது.
மருத்துவராகவோ – பொறியாளராகவோ வரவேண்டும் என்கிற உறுதியுடன் படித்துவரும் மாணவர்களின் லட்சியம் ஈடேற முதல்படியாக அமையவிருப்பது 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அவர்கள் எடுக்கும் மதிப்பெண்களே ஆகும்.
தேர்வுக்காலங்களில் வெளிப்புற நடவடிக்கைகளில் கவனம் செலுத்தாமல், தேர்வு ஒன்றையே குறிக்கோளாகக் கொள்ளவேண்டும். கற்பது – கற்றதை நினைவு கூர்வது – நினைவு கூர்வதை எழுதுவது ஆகிய மூன்று தொடர் நடவடிக்கைகளே தேர்வின் வெற்றிக்கு முக்கியக் காரணிகளாகும்.
எனவே, கருத்தூன்றிக் கற்றதை மதிப்பெண்ணாக்கும் கலையில் தங்களை தெளிவுடன் வரையறுத்துக்கொண்டு, இத்தேர்வினை எழுதி வெற்றிபெற 11 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.