இந்திய அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள்தான் மக்களாட்சி எனக் கொண்டாடப்படும் குடியரசு தின விழா. சுமார் 200 ஆண்டுகள் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தில் வீழ்ந்துகிடந்த இந்தியத் திருநாட்டை, விடுதலை பெற்ற நாடாக மீட்பதற்கு அண்ணல் காந்தியடிகளின் தலைமையில் மக்கள் ஒன்றிணைந்து போராடிய சத்திய வேகம் - அரசியல் அறநெறி ஆகியவற்றினை மீண்டும் புத்துயிர் ஊட்டி நடைமுறைக்குக் கொண்டுவர நல்ல தருணமாக இனிவரும் நாட்கள் அமையட்டும்.
உலகளவில் மிகப்பெரும் ஜனநாயக நாடாக விளங்கும் இந்தியத் திருநாட்டின் மாண்பிற்கும், பொருளாதாரம் மற்றும் அறிவியல் துறைகளில் இந்தியா முன்னெடுக்கும் துணிச்சலான நடவடிக்கைகளுக்கும் துணை நின்று, உலக அரங்கில் இந்தியாவின் கம்பீரம் பட்டொளி வீசிப் பிரகாசிக்க, இந்நன்னாளில் உறுதியேற்போம் எனக்கூறி, இந்திய மக்கள் அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
Powered by iPOT Technologies