• சேலத்தில் நடைபெற்ற வழக்கிலிருந்து விடுதலையான ஐஜேகே தோழர்களுக்கு - டாக்டர் பாரிவேந்தர் வாழ்த்து -

   அறிக்கை விவரம்

   

  கடந்த 2012 – ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் திருநாளை முன்னிட்டு திரு.சங்கர் அவர்களின்  இயக்கத்தில் “நண்பன் என்கிற திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தில் என்னுடைய பெயரான பாரிவேந்தர் என்பதை களங்கப்படுத்தும் விதத்தில் ஒரு வசனம் பேசப்பட்டிருந்தது.

   

  இதனையறிந்த இந்திய ஜனநாயகக் கட்சியின் தோழர்கள், தமிழகம் முழுவதும் கண்டனங்களைத் தெரிவித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நண்பன் திரைப்படம் வெளியான திரையரங்குகளுக்கு முன்பாக கூடி, அறவழியில் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.

   

  எனினும், சேலத்தில் இத்திரைப்படம் வெளியான திரையரங்கின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐஜேகே-வைச் சார்ந்த 34  பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. திரையரங்கிற்கு சேதம் விளைவித்ததாகக் கூறி, தொடரப்பட்ட இந்த வழக்கின் விசாரணை கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

   சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில், இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி குற்றம் சாற்றப்பட்ட அனைவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

   

  தன் கட்சியின் தலைவர் மீது களங்கம் சுமத்தப்பட்டதைக் கண்டு சகிக்காமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக இவ்வழக்கினையும் சந்தித்து நிரபராதிகள் என விடுதலை பெற்றுள்ள அனைத்து தோழர்களுக்கும் என் வாழ்த்துக்களையும் – பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.