கரூர் மாவட்டம் தோகைமலை அருகேயுள்ள கொசூர் கிராமத்தைச் சேர்ந்த ராணுவவீரர் மூர்த்தி அவர்கள் காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த செய்தி அறிந்து மிகவும் வருந்துகின்றேன்.கடந்த 14 ஆண்டுகளாக ராணுவத்தில பணிபுரிந்து எல்லைப் பாதுகாப்பில் கடமை உணர்வுடன் பணியாற்றி இருக்கின்றார்.
கடந்த 11 –ம் தேதி திரு.மூர்த்தி மற்றும் அவருடன் 5 ராணுவவீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மிகப்பெரும் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதில் சிக்கி 5 ராணுவ வீரர்களும் பலியாகி உள்ளனர். இப்பனிச்சரிவில் சிக்கி இறந்த திரு.மூர்த்தி அவர்களின் உடல் இரண்டு நாட்களுக்கு முன்பு மீட்டெடுக்கப்பட்டு, அவரின் சொந்த ஊருக்கு கொண்டுவரப்படுகின்றது.
ராணுவவீரர் திரு.மூர்த்தி அவர்களை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன். மேலும் உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்திற்கு உரிய நிவாரண உதவியினை அளிப்பதோடு, அவரின் குழந்தைகளின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பிற்கான உத்தரவாதத்தினை வழங்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கின்றேன்.
Powered by iPOT Technologies