• இந்தியாவின் வளர்ச்சிக்கு ராகுல் காந்தியின் பங்களிப்பு ஆக்கப்பூர்வமானதாக இருக்கவேண்டும் - காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு டாக்டர் பாரிவேந்தர் வாழ்த்து

    நாயகம் என்பது பெருக்கெடுத்து ஓடும் நதி என்றால், அதில் ஆளுங்கட்சி ஒரு கரையாகவும், எதிர்கட்சி மறுகரையாகவும் இருந்து நதியின் ஓட்டத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். பலவீனமான ஆளுங்கட்சி எப்படி நாட்டை முன்னேற்ற முடியாதோ அதேபோல் பலவீனமான எதிர்கட்சியும் ஆட்சியின் குறைபாடுகளை  சுட்டிக்காட்ட முடியாமல் போகலாம். எனவே, ஆளுங்கட்சியைப் போல் - எதிர்கட்சியும் பலமானதாக இருக்க வேண்டும்.

    அவ்வகையில், பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக திரு.ராகுல்காந்தி அவர்கள் இன்று (16.12.2017) முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இந்தியாவின் மாபெரும் தலைவரான ஜவகர்லால் நேரு அவர்களின் குடும்பவழி வாரிசாக அறியப்பட்டாலும், அவரின் இடையறா அரசியல் ஆர்வத்தாலும்,  உழைப்பாலும் இப்பொறுப்பிற்கு வந்துள்ளார் என்றே கருதலாம்.

     நாடாளுமன்ற உறுப்பினர் – காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவர் – துணைத் தலைவர் ஆகிய பொறுப்புகளில், சிறப்பான முறையில் செயலாற்றியுள்ள 
    திரு. ராகுல்காந்தி அவர்கள், காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்து, இந்தியாவின் வளர்ச்சிக்கு தன் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்கவேண்டும் எனக்கூறி, அவருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.