• உச்சநீதிமன்றத்தில் உள்ள மேல்முறையீட்டு மனுவை திரும்பப்பெற்று நவோதயா பள்ளிகளை திறக்க தமிழக அரசு முன்வரவேண்டும். - IJK நிறுவனர் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் வலியுறுத்தல்

    1986-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களால் கொண்டுவரப்பட்ட ‘ஜவஹர் நவோதயா வித்யாலயா  பள்ளிகள் தமிழகம் தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.கிராமப்புற மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த வேண்டும் என்கிற உன்னத நோக்கத்தில் கொண்டுவரப்பட்ட இப்பள்ளிகள் அனைத்தும்ஊரகப்பகுதிகளிலேயே செயல்பட்டு வருவது கூடுதல் சிறப்பாகும்.

     மாநிலங்களில் கடைபிடிக்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டு கொள்கையின் படிமகளிர் – தாழ்த்தப்பட்டவர் –மலைசாதியினர் – பிற்படுத்தப்பட்டவர் என அனைத்து வகுப்பு மாணவர்களும் இட ஒதுக்கீட்டின்படி சேர்க்கப்படுகின்றனர். மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் தனி அதிகாரம் படைத்த அமைப்பாக இப்பள்ளிகள் இயங்கி வருகின்றனமத்திய பாடத்திட்டத்தின்படி அமைக்கப்பட்ட தரமான கல்வியும்நவீனமுறையில் கற்பிக்கப்படும் பாங்கும் மாணவர்களின் பகுத்தாய்ந்து கல்விபயிலும் திறனை வளர்க்கின்றதுகடந்த ஆண்டு நடைபெற்ற மருத்துவ நுழைவுத் தேர்வில் சுமா 14700 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 11200 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர் என்பதே இப்பள்ளிகளின் கல்வி தரத்திற்கு எடுத்துக்காட்டாகும்.  

     இத்தனை சிறப்புகள் வாய்ந்த இப்பள்ளிகளை தமிழகத்தில் திறக்க விடாமல்குறுகிய கொள்கைகளை உடைய சில கட்சிகள் எதிர்த்து வருகின்றனகுறிப்பாக தமிழகத்தை கடந்த 50 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்துவரும் திமுகவும்அஇஅதிமுக-வும் மாநில கல்வி வளர்ச்சியில் போதிய அக்கறை செலுத்துவதில்லை என்பதோடுதரமான கல்விமுறை மாநிலங்களில் கொண்டு வருவதையும் எதிர்ப்பது என்பது மாணவர் சமுதாயத்திற்கு இழைக்கும் துரோகமாகும்.

     

    இந்நிலையில்கடந்த செப்டம்பர் மாதம் 11-ம் தேதி மதுரை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் 2018-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து தரவேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்ததுகுறிப்பாக மாவட்டம் தோறும் 240 மாணவர்கள் பயிலும் வகையில் அப்பள்ளிகளுக்கான இடத்தினை வழங்கவேண்டுமெனவும், 8 வாரங்களுக்குள் தடையில்லா சான்றிதழ் வழங்கவேண்டும் எனவும் மதுரை உயர்நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியிருந்தது.

      இந்த உத்தரவினை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் கடந்த நவம்பர் மாதம் 11-ம் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டதுதில் தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம் 2006-ன் படி தமிழ் மற்றும் ஆங்கிலம் என இருமொழிக்கொள்கை கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும்நவோதயா பள்ளிகளில் மாநில மொழி ஆங்கிலம் மற்றும் ஹிந்தி என மும்மொழி கொள்கை கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும் கூறி இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.தமிழகத்தில் தனியார் நடத்தும் பலநூறு மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்சி பள்ளிக்கூடங்களில் இந்தி மொழி கற்பிக்கப்பட்டு வருகின்றது.

     

    மாநில அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள்கூட சொந்த விருப்பத்தின் பேரில் இந்தி மொழி கற்றுவருகின்றனர்எனவே இந்தி திணிப்பை எதிர்க்கின்றேன் என்கிற பெயரில் இந்தி மொழியை கற்கவே கூடாது என்பது பிற்போக்கு சிந்தனையாகும்மாணவர்களின் இளம் வயது அறிவுத்திறன் என்பது பல மொழிகளையும் கற்று,பேசும் ஆற்றல் கொண்டதாகும்தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே படிக்கவேண்டும் என நிர்பந்தப்படுத்துவது அம்மாணவர்களின் அறிவாற்றலை சிதைக்கும் செயலாகும்.

     

              எனவே காலத்திற்கொவ்வாதகாலாவதியாகிவிட்ட சில கொள்கைகளின் பெயரால் எதிர்கால இந்தியாவின்ஆளுமைகளாக விளங்கும் மாணவர்களின்  மொழியாற்றலை ஊனப்படுத்தும் செயலை கைவிட்டுநவோதயா பள்ளிகள்  திறக்கப்படஉச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு மனுவினை திரும்பப்பெற்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நவோதயா பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என தமிழக அரசினை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்