• திருச்சியில் 24-ம் தேதி நடைபெற உள்ள IJK மாநில - மாவட்ட கலந்தாய்வு கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் கலந்துகொள்ள வேண்டும் - கட்சி பொறுப்பாளர்களுக்கு டாக்டர் பாரிவேந்தர் அழைப்பு -

   

  தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், வரவிருக்கின்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில்  நாம் போட்டியிடுவது குறித்தும், ஆலோசனை செய்ய  மாநில – மாவட்ட  நிர்வாகிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் நான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றேன்.இப்பயணத்தின் மூலம், கிளை அமைப்பு முதல் மாவட்ட அமைப்பு வரையிலான அனைத்து நிர்வாகிகளையும் நேரடியாக சந்தித்து, கட்சியின் வளர்ச்சி குறித்து ஆலோசிக்க உள்ளேன்.

   

  இக்காரணங்களை முன்னிலைப்படுத்தி, மாநில – மாவட்ட நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம், வருகின்ற 24-ம் தேதி(வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.00 மணியளவில், திருச்சியிலுள்ள SRM ஹோட்டல்  Annex-ல்  நடைபெற உள்ளது. இதில் அனைத்து நிர்வாகிகளும் தவறாமல் கலந்துகொண்டு, அவர்களின் கருத்துக்களை இக்கூட்டத்தில் பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

  அன்புடன்,

  டாக்டர் பாரிவேந்தர்

  நிறுவனர் தலைவர்

  இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)