-
GST வரிகுறைப்பு நடவடிக்கையின் மூலம் சாதாரண – நடுத்தர மக்கள் பயனடைவார்கள் - மத்திய அரசின் வரிகுறைப்பிற்கு டாக்டர் பாரிவேந்தர் வரவேற்பு -
அசாம் மாநிலம் கோஹாத்தியில் GST கவுன்சிலின் 23-வது கூட்டம் நேற்று (10.11.2017) நடைபெற்றது. இதில், நமது நாட்டின் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சி கொள்ளும் வகையில் 178 பொருட்கள் மீதான GST வரி பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.கடந்த ஜூலை மாதம் முதல் நாடு முழுவதும் ஒரே வரிவிதிப்பு என்கிற கருத்தின் அடிப்படையில் சரக்கு மற்றும் சேவை வரித்திட்டம் அமல்படுத்தப்பட்டது. அப்பொழுது பல பொருட்கள் மீதான வரி அதிகளவில் இருப்பதாகவும், இது பணமதிப்பிழப்பு நடவடிக்கைகு அப்புறமான பொருளாதார சூழ்நிலையில், பொதுமக்கள் மீது மேலும் சுமையை ஏற்படுத்தும் என கூறப்பட்டது. அதற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களும், மத்திய நிதி அமைச்சர் திரு.அருண்ஜெட்லி அவர்களும் பல்வேறு விளக்கங்களை தெரிவிந்திருந்தனர். குறிப்பாக GST கவுன்சில் கூட்டம் ஒவ்வொரு மாதமும் கூட்டப்பட்டு பல்வேறு மாநிலங்களில் வரிவிதிப்பு சம்பந்தமாக ஏற்படும் சிக்கல்கள் குறித்து ஆராயப்படும் எனவும் கூறியிருந்தனர்.
மேலும், இவ்வரிவிதிப்பினால் ஏற்படும் விற்பனைத் தேக்கம் மற்றும் உற்பத்தி குறைவு குறித்து விவாதிக்கப்பட்டு,தேவையெனில் வரிகுறைப்பும் செய்யப்படும் என உறுதி அளித்திருந்தனர். அதன்படி நேற்று நடைபெற்ற GST கவுன்சில் கூட்டத்தில்178 பொருட்கள் மீதான வரி பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கை மூலம் சாதாரண – நடுத்தர மக்கள் பெரிதும்பயனடைவதோடு, விற்பனையும் – உற்பத்தியும் மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகளை ஏற்றும், நடைமுறை யதார்தத்ததை புரிந்துகொண்டும், GST வரிவிதிப்பில் பல்வேறு வரிக்குறைப்புகளை அறிவித்துள்ள மத்திய அரசின் நடவடிக்கையை இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் வரவேற்கின்றேன்.
அன்புடன்,
டாக்டர் பாரிவேந்தர்
நிறுவனர் தலைவர்
இந்திய ஜனநாயக கட்சி (IJK)