• தமிழறிஞர் பேராசிரியர் மா. நன்னன் அவர்கள் இலக்கணத் தமிழிற்கு பெரும் பங்காற்றியவர் -தமிழறிஞர் மா.நன்னன் மறைவிற்கு டாக்டர் பாரிவேந்தர் இரங்கல் -

  1924-ம்  ஆண்டு ஜூலை மாதம் 30-ம் தேதி, கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சாத்துக்குடல் எனும் சிற்றூரில் பிறந்த பேராசிரியர் மா. நன்னன் அவர்கள், தன் 94-ம் அகவையில் இயற்கையெய்தினார் எனும் செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

   

  நீண்ட - நிறைவான வாழ்க்கை வாழ்ந்துள்ள மா.நன்னன் அவர்கள், இளமைக்காலம் தொட்டே தமிழ்வளர்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வந்துள்ளார். மாணவர் பருவத்தில் சுதந்திரப் போராட்ட வீரராக திகழ்ந்த இவர், பின் திராவிட கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, தந்தை பெரியாரின் மீது மாறாத பற்று கொண்டவராக விளங்கினார்.

   

  தமிழில், பேச்சு முறை – எழுத்துமுறை என இரண்டு வகை உள்ளது. இதில், எழுத்துமுறைக்கான இலக்கணத்தை மிகவும் எளிய முறையில், குறிப்பாக இளம் மாணவர்கள் விளங்கிக்கொள்ளும் வகையில், சென்னைத் தொலைக்காட்சியில் அவர் ஆற்றிய தொடர் சொற்பொழிவு என்றும் பயனுள்ளாக இருக்கும். இவ்வாறு இலக்கணத் தமழிற்கு பெரும் பங்காற்றிய தமிழறிஞர் பேராசிரியர் மா. நன்னன் அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்.

   

      அன்புடன்,            
    (டாக்டர் பாரிவேந்தர்) 
   நிறுவனர் தலைவர்  
  இந்திய ஜனநாயக கட்சி