• காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் இழப்பீட்டு தொகையினை பெறும் நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் - தமிழக அரசிற்கு டாக்டர் பாரிவேந்தர் கோரிக்கை

    பருவமழை பொய்த்ததின் காரணமாகதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களையும் வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து,விவசாய வரி மற்றும் நிலவரி அனைத்தையும் ரத்து செய்த தமிழக அரசை இந்திய ஜனநாயக கட்சி வரவேற்கின்றதுமேலும் வறட்சி பாதித்த பகுதிகளை கணக்கெடுத்து அதன் அடிப்படையில் நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூபாய் 5,465 எனவும்மானாவாரி பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூபாய் 3000 எனவும் இழப்பீடு வழங்கப்படும் என்ற அறிவிப்பு போதுமானதாக இல்லைஇதனை மேலும் உயர்த்தி தர வேண்டும்

    அதேபோல்பயிர் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் 100 சதவீத பாதிப்பிற்குள்ளான பயிர்களுக்கு ரூபாய் 26000/- எனவும்,  80 சதவீதத்திற்கு ரூபாய் 20,000/- எனவும், 60 சதவீதத்திற்கு ரூபாய் 15,000/- எனவும், 33 சதவீத பாதிப்பிற்கு ரூ.8,250/- எனவும் இழப்பீடு நிர்ணயிக்கப்பட்டுஅத்தொகை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதுஇந்த இழப்பீட்டினை விவசாயிகள் தாமதமின்றி பெறுவதற்கு வருவாய் ஆய்வாளர் - கிராம நிர்வாக அதிகாரி – வட்டாட்சியர் ஆகியோர்களின் நேரடி மேற்பார்வையில் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் இழப்பீட்டினை விவசாயிகள் விரைவாகப் பெறுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும்.

    மேலும் விவசாயிகள் பெற்ற கடன்களில் குறுகிய கால கடனான ரூபாய் 3,208 கோடியை  மத்திய கால கடன்களாக மாற்றி தமிழக அரசு அறிவித்துள்ளதுஆனால்ஜூலைக்குப்பி றகு பருவ மழையோ அல்லது ஆற்றுப்பாசனமோநிலத்தடி நீரோ இல்லாத சூழ்நிலையில் விவசாயிகளால் மீண்டும் பயிர் வைக்க முடியாதுஎனவேகடனை திருப்பிச் செலுத்தும் அளவிற்கு மகசூல் பெற இயலாது என்பதால் மத்திய கால கடன் என்பதற்குப் பதிலாக - நீண்ட கால கடன் என மாற்றி அறிவிக்க வேண்டும் எனவும் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.