• பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசியின் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் - டாக்டர் பாரிவேந்தர் கோரிக்கை

    நியாய விலைக்கடை என்பது பொது விநியோக திட்டத்தின் கீழ் மத்திய– மாநில அரசுகளால் நிர்ணயிக்கப்படும் ஒரு நுகர்பொருள் விற்பனை மையமாகும்இதன் மூலம் இந்தியா முழுவதும் ஏறக்குறைய 5 லட்சம் கடைகள் உள்ளன

    தமிழகத்தில் 1977-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் திரு.எம்.ஜி.ஆர் அவர்களால் அனைத்து கிராமங்களிலும் நியாய விலைக்கடைகள் திறக்கப்பட்டுஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ அரிசி ரூ.1.75 வீதம் 10கிலோ வழங்கப்பட்டது.  அதன் பிறகு தமிழகத்தில் ஆட்சி செய்தவர்களால் இலவச அரிசியாகவும் – மலிவு விலை அரிசியாகவும் இத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டதுதமிழகத்திலுள்ள சுமார் 31,388 நியாய விலைக்கடைகள் மூலம் ஏறக்குறைய 3 லட்சம் டன் அரிசி ஒவ்வொரு மாதமும் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றது.  இதன் மூலம் சுமார் 90 சதவீதம் மக்கள் பயனடைந்து வருகின்றனர்

    தற்போது பொது வினியோக திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு வழங்கப்படும் அரிசியின் விலையை கிலோ ரூ.8.30-லிருந்துரூ.22.54 என்று  மூன்று மடங்கு உயர்த்தியுள்ளதுஇதன் மூலம் ஆண்டிற்கு ரூ.2,134 கோடி கூடுதலாக தமிழக அரசுக்கு நிதிச்சுமை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது

    ஏற்கனவே கடந்த 2013–ல் அப்போதைய காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்ட உணவு பாதுகாப்பு சட்டத்தினை அனைத்து மாநிலங்களும் நிறைவேற்றிய சூழலில் தமிழகம் அதனை எதிர்த்து வந்ததுஅதனைத் தொடர்ந்து கடந்த 2015-ம் ஆண்டு தற்போதைய மத்திய அரசு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தினை கொண்டுவந்தது

    அதன் பிறகு நடத்தப்பட்ட அமைச்சரவை கூட்டத்தில்தமிழகத்திற்கு இனி ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும் அரிசிகுறைந்தபட்ச ஆதாரவிலையில் வழங்கப்படும் என முடிவெடுக்கப்பட்டதுஅதன் பின்னணிதான் இந்த விலையேற்றமோ….? என்ற  அச்சம் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது

    தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் தமிழகம் இணையவில்லை என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த விலையேற்றம் இருந்தால்பொது மக்களின் நலன் கருதி உடனடியாக மத்திய அரசு தற்போது மும்மடங்காக உயர்த்தியுள்ள அரிசி விலையை திரும்பப் பெறவேண்டும்எனவே,  தமிழக மக்களின் உணவுத் தேவை மற்றும் வாழ்வாதாரப் பிரச்சனைகளை கருத்தில்கொண்டு தமிழக அரசுக்கு வழங்கும் உணவுப்பொருட்களின் விலையை உயர்த்தக்கூடாது எனஇதன் மூலம் மத்திய அரசினை கேட்டுக்கொள்ளப்படுகிறது.