• IJK தலைமை அலுவலக நிர்வாகப் பொறுப்பாளர் நியமனம் – டாக்டர் பாரிவேந்தர் அறிவிப்பு

    இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைமை அலுவலகப் பணிகளைமுறைப்படுத்தவும்உறுப்பினர் விண்ணப்பங்களை பெறுதல் – உறுப்பினர் அட்டைகள் மற்றும் பொறுப்பாளர் அடையாள அட்டைகளை வழங்குதல், தலைமை மற்றும் கட்சியின் செயல்பாடுகளை மாவட்ட – ஒன்றிய – நகர – கிளை அமைப்புகளுக்கு கொண்டு செல்லுதல், கட்சி பொறுப்பாளர்களுடனான தொடர்பினை மேலும் வலுப்படுத்துதல் ஆகிய செயல்பாடுகளை நவீனப்படுத்த தீர்மானித்துள்ளோம். 

    இப்பணிகளை ஒருங்கிணைக்கவும், தலைமை அலுவலக ஊழியர்களின் பணிகளை செம்மைப்படுத்தவும், தலைமை அலுவலக நிர்வாக பொறுப்பாளர்எனும் பொறுப்பிற்கு கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் திரு. எம்.எஸ். ராஜேந்திரன் அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார். எனவேகட்சியின் அனைத்து பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும், தலைமை அலுவலகப் பணியாளர்களும் அவருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.