• பாரிவேந்தர் அவர்கள் விண்ணளாவி உயர்ந்து நிற்கும் மலைமுகடு அதனைப் பார்த்து குரைப்பதால் எந்த குந்தகமும்ஏற்படாது..!! பாமக வழக்கறிஞர் பாலுவிற்கு ஐஜேகே பொதுச்செயலாளர் பி. ஜெயசீலன் பதில்

    நெஞ்சில் உரமும் இன்றி, நேர்மைத் திறமும் இன்றி வஞ்சகம் ஒன்றையே வாழ்வியல் கோட்பாடாக கொண்டிருக்கும் டாக்டர் ராமதாஸ் அவர்கள், எங்களின் உத்தமத் தலைவர் டாக்டர் பாரிவேந்தரின் பதில் அறிக்கைக்கு அரண்டுப்போய் கிடக்கிறார் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், அவரின் வழக்கறிஞர் பாலு அவர்கள் மூலம் ஒரு அறிக்கையினை வெளியிட வைத்துள்ளார்.

    நரகல் வார்த்தைகளையே வடித்தெடுக்கும் நாலாந்தரமான பதில்கள். நடுநிலையாளர்களை முகம் சுளிக்கவைக்கும் மூன்றாம் தரமான வாதங்கள் தான் அந்த வழக்கறிஞரின் அறிக்கையில் கொட்டிக் கிடக்கின்றன.

    எங்கள் தலைவர் டாக்டர் பாரிவேந்தரின் நெஞ்சு குற்றமுள்ளது என்று கூறுகிறார் வழக்கறிஞர் பாலு. கட்சி தொடங்கிய காலம் முதல் இன்று வரை குற்றம் செய்வது மட்டுமே கொள்கை என வாழ்ந்து வருவது மருத்துவர் ராமதாஸ்தான் என்பதை நாடறியும். நானோஎன் குடும்பத்தினரோ எந்த பதவிக்கும் வரமாட்டோம்அப்படி வந்தால் என்னை முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள்” என்று சொன்ன ராமதாஸ் அவர்கள் அப்படியே பல்டி அடித்து தன் மகனை மத்திய அமைச்சராக ஆக்கியபோது அவரின் நெஞ்சம் குற்றத்தால் குறுகுறுக்கவில்லையா?

    எஸ்.ஆர்.எம்பல்கலைக்கழகத்தில்டாக்டர் பாரிவேந்தர் சார்ந்த சமுதாய மக்கள் எத்தனை பேருக்கு நன்கொடை இல்லாமல் இடம் கொடுத்திருக்கிறார் என்று கேட்கிறார்கள் வழக்கறிஞர் பாலு.

    உதவிகேட்டு வந்தவர்களின் சட்டைக்குள் ஒளிந்திருக்கும் சாதியைப் பார்த்துவிட்டு உதவி செய்யும் ஈனபுத்தி எங்கள் தலைவரிடம் இல்லைஉதவிக்காக வரும் மாணவர்கள் எத்தனை மதிப்பெண் எடுத்திருக்கிறார்கள்என்றுதான் கேட்பாரே ஒழிய,என்ன சாதி என்று கேட்கமாட்டார்.

    எனினும்விளக்கங்களுக்காக அவர் செய்த உதவிகள் சிலவற்றை சொல்கிறேன்எங்கள் பார்க்கவகுல சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் இலவசமாகவும்பெரும் கட்டணச் சலுகையுடனும் படித்தும் – படித்துக்கொண்டும் இருக்கிறார்கள் என்பதை நாடறியும்தான் பிறந்த சமுதாயத்தினர் பல்லாயிரம் பேருக்குபடிப்பிற்கேற்ற பதவியை கொடுத்து அழகு பார்க்கும் எங்கள் வேந்தரைஎங்கள் சமுதாயம் காவல் தெய்வமாகவே போற்றி வருகிறது என்பதை வழக்கறிஞர் பாலு புரிந்துகொள்ள வேண்டும்.

    அதேபோல்வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த எண்ணற்ற மாணவர்கள் இன்றளவும் இலவசமாகவும், சலுகையுடனும்  SRM பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கிறார்கள்சுமர் 10ஆயிரம் பணியாளர்களைக் கொண்ட SRM நிறுவனத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வன்னியர்கள்வெவ்வேறு பதவிகளில் கௌரவமாக பணியாற்றி வருகிறார்கள் என்பதையும் வழக்கறிஞர் பாலு அவர்கள் புரிந்துகொண்டு பொறுப்புடன் பேசவேண்டும்.

    SRM ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆண்டுக்கு 200பார்வையற்றஉடல் ஊனமுற்ற மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கி வருகிறார்பொறியியல் கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு முற்றிலும் கட்டணமில்லாத இலவசக் கல்வியும்மூன்றாயிரம் மாணவர்களுக்கும் மேல் கட்டணச் சலுகையுடன் கூடிய கல்வியும் வழங்கி வருகிறார்தானே புயலில் சிக்கிநிலைகுலைந்த கடலூர்விழுப்புரம் மாவட்டத்தைச்சேர்ந்த எஸ்.ஆர்.எம்பல்கலைகழக பொறியியல் மாணவர்களுக்கான கட்டணம் ரூபாய் 7.5 கோடியை முற்றிலும் தள்ளுபடி செய்து,அந்த மாணவர்களின் குடும்பத்தில் நம்பிக்கை ஒளியை ஏற்றிவைத்தார்.

    SRM மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான ஏழை எளியோர்களுக்கு இலவச மருத்துவம் செய்துகொள்ளவேந்தர் அவர்கள் தினசரி கையெழுத்திட்டு அனுப்புவதைடாக்டர் ராமதாஸ் அவர்களால் வசூலுக்கு அனுப்பிவைக்கும் ஆட்களே நன்கறிவார்கள்ஈகை குணம் என்பது வேந்தருடன் பிறந்த இயற்கை குணம்அது ராமதாஸ் போன்ற அரசியல் வணிகர்களுக்கு புரியாது.

     காணாமல் ஓடிப்போய்விட்டதாக கூறப்படும் மதனின் வக்கீலாக அவதாரம் எடுத்துள்ள டாக்டர் ராமதாஸ் அவர்களுக்குபாலுவைப்போன்றவர்கள் நீதி பரிபாலன சட்ட நடைமுறையை எடுத்துக்கூறாதது ஏன்?

    குற்றம் சாட்டப்பட்ட ஒருவர்தான் நிரபராதி என்பதை நிரூபிக்க சட்டம் அளித்துள்ள வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள முழு உரிமை உண்டு என்பது வழக்கறிஞருக்குத் தெரியாதாஅன்புமணி அவர்கள் மருத்துவக் கல்லூரி அனுமதியில் முறைகேடாக நடந்து கொண்டார் என குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டவுடனேயே அவர் சரணாகதி அடைந்துவிட்டாரா?  அல்லது டாக்டர் ராமதாசின் மகள் மீது நில அபகரிப்பு புகார் எழுந்த உடனேயே அவர் தன்னை குற்றவாளி என ஒப்புக்கொண்டாராஇல்லையேஇரண்டு பேருமே சட்டத்தில் தங்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளை பயன்படுத்திக் கொண்டார்கள் அல்லவாஆனால்டாக்டர் பாரிவேந்தர் மட்டும்,தன் மீது ஒரு பொய்குற்றச்சாட்டு வந்த உடனேயே அதனை ஒப்புக்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பதுமருத்துவர் ராமதாசின் குரோத புத்தியைத்தான் காட்டுகின்றதே ஒழிய வேறொன்றுமில்லை.

    பகுத்தறிவுசுயமரியாதை இரண்டையும் தன் இரு கண்கள் என ஏற்று வாழ்ந்து வரும் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள்யாரின் கால்களிலும் விழுந்ததில்லைவளைந்து – குனிந்து கூழை குப்பிடுபோடும் வழக்கமும் அவரிடம் இல்லைபொதுவாழ்வில் எத்தனையோ தலைவர்களிடம் பழகியும்நேரில் சந்தித்தபோதும் மரியாதை நிமித்தமான வணக்கம் கூறியதன்றியார் காலிலும் வீழ்ந்து வணங்கும் வழக்கம் இல்லாதவரை, “ஆட்சியாளர்களின் கால்களில் விழுந்தார் என கூறியிருப்பது பாலு அவர்களின் வறண்ட கற்பனையின் உச்சம்.

    பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பு மாணவர்களின் கடந்த எட்டாண்டு கால மதிப்பெண்பட்டியலை காட்டத்தயாராஎன கேட்கும் பாலு அவர்கள்தன்னை தானே பல்கலைக்கழக மானியக்குழு தலைவராக நினைத்துக்கொள்ளும் கோமாளிதனத்தினை நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது

    படிக்காமலேயே டாக்டர் பட்டம் வாங்கியவர்’ என எங்கள் தலைவரைப் பற்றி கூறுகிறார் வழக்கறிஞர் பாலுஇதற்காகவே இவர் மீது மானநஷ்ட வழக்கு தொடரமுடியும்ஆனால் மானமும் மதியும் கெட்டு அலைபவர்களிடம் நாம் என்ன எதிர்பார்க்க முடியும்?

    கணிதத்தில் இளங்கலை பட்டமும், AMIE பொறியியல் பட்டமும் பெற்றவர் டாக்டர் பாரிவேந்தர்அதேபோல்கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம்லண்டனில் உள்ள பிரமிங்காம் பல்கலைக்கழகம் பாரிவேந்தர் அவர்களின் கல்விச் சேவையினை பாராட்டி ‘டாக்டர்’ பட்டம் வழங்கியதுஎனினும்தனக்கான பட்டங்களையும்பாராட்டுக்களையும்புகழுரைகளையும் புறந்தள்ளிஎளிய மனிதராகவே தன்னை வெளிக்காட்டிக் கொள்பவர் எங்கள் வேந்தர்அதேவேளையில்மருத்துவர் ராமதாஸ் அவர்கள் எந்த இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ‘டாக்டர்படிப்பை முடித்தார் என்பதை வழக்கறிஞர் பாலு விளக்குவாரா?

    செக்கிற்கும் சிவலிங்கத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் எண்ணெய்ப்பசை ஒன்றிற்காகவே ஓட்டிக்கிடக்கும் சிலரின் கயமைத்தனங்களால்,  எங்களுக்கு எந்த மாசு மருவும் ஏற்படப்போவதில்லைடாக்டர் பாரிவேந்தர் அவர்கள் விண்ணளாவி உயர்ந்து நிற்கும் மலைமுகடுஅதனைப் பார்த்து பாலுவைப் போன்றவர்கள் குரைப்பதால் மலைக்கு எந்த குந்தகமும் ஏற்படாது என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.