• தமிழக மாணவர்களின் கல்வித்தரம் உயர ‘நவோதயா’ பள்ளிகளை திறக்க வேண்டும் - டாக்டர் பாரிவேந்தர் கோரிக்கை

    தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு, சமீபத்தில் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டது. தமிழகத்தில் உள்ள சுமார் 350 பள்ளிக்கூடங்களை மாதிரியாக எடுத்துக் கொண்டு, அதில் 10-ம் வகுப்பு பயிலும் 15 ஆயிரம் மாணவர்களிடம் ஒரு தேர்வை நடத்தியது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன.

    இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் தேர்வு செய்யப்பட்ட சில பள்ளி மாணவர்களிடமும் இதே போன்ற தேர்வுகள் நடைபெற்றன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 28 வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டனர் என்கிற அதிர்ச்சி தகவல் சமீபத்தில் வெளியானது. அனைத்திந்திய சிவில் சர்வீஸ் உள்ளிட்ட தேர்வுகளிலும் தமிழக மாணவர்கள் இதேபோன்ற நிலையிலேயே பின்னுக்கு தள்ளப்படுகின்றனர்.இதற்கெல்லாம் முதற்காரணம் இன்னும் நாம் தேசிய – சர்வதேச அளவில் நம் பாடத்திட்டங்களை மாற்றிக் கொள்ளாததேயாகும். 

    தற்போது மாநில கல்விபாடத்திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் சுமார் 57 ஆயிரம் பள்ளிக் கூடங்கள் இயங்குகின்றன. இது தவிர தனியார் பள்ளிக் கூடங்களும் ஆயிரக்கணகில் உள்ளன. இவை அனைத்தும் சமச்சீர் கல்விதிட்டத்தின்படி ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியிலேயே கற்பிக்கப்படுகின்றன. 

    இவை தவிர, ‘கேந்திர வித்யாலயா’ என்கிற பெயரில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், 41 சிபிஎஸ்இ பள்ளிக் கூடங்கள் செயல்படுகின்றனஇதில் 14 பள்ளிக்கூடங்களில் முழுக்க முழுக்க ராணுவத்தில் பணிபுரிவர்களின் பிள்ளைகள் மட்டுமே படிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

    அதே வேளையில்தேசிய அளவிலான பாடத்திட்டதின் கீழ் செயல்படும் நவோதயா பள்ளிகள்’ தமிழ்நாட்டில் மட்டும் செயல்படவில்லை. 1986-ம் ஆண்டு ராஜீவ் காந்தி அவர்கள் பிரதமராக இருந்த போதுசிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நவோதயா பள்ளிகள் திறக்கப்பட்டனஇப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம்தங்கும் விடுதிகள்,பாடபுத்தங்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன.மேலும்குறிப்பிட்ட மாநிலத்தின் தாய்மொழிஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களுடன் இந்தி மொழியும் கற்பிக்கப்படுகின்றனஎனினும் இந்தி பாடத்தில் தேர்வு பெற்றால்தான் மேல்வகுப்புக்கு செல்லமுடியும் என்கிற கட்டாயம் இல்லைஆனால், ‘இந்தி திணிப்பு’ என்கிற பெயரில் இதனை எதிர்க்கும் கட்சி மற்றும் அரசுகளால் நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் திறக்கப்பட முடியாத நிலையில் உள்ளதுஎனினும் தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்கள் அனைத்திலும் இப்பள்ளிகள் செயல்படுகின்றன.மாணவப்பருவம் என்பது பல மொழிகளை கற்பதற்கு ஏற்றப்பருவம் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

    தமிழக மாணவர்கள் தொடர்ந்து தேசிய அளவில் கல்வித்தரத்தில் பின்தங்கியுள்ள நிலைக்கு இவை எல்லாம் காரணங்களாகும்எனவே நவீன பாடத்திட்டதின் கீழ் செயல்படும் நவோதயா பள்ளிகளைகுறைந்தபட்சம் மாவட்டத்திற்கு ஒன்று என்கிற விகிதத்திலாவது செயல்பட தமிழக அரசு முன் முயற்சி எடுக்கவேண்டும்இந்தி திணிப்பு என்கிற பெயரில் தமிழக மாணவர்களை தேசிய கல்வித்தகுதி தேர்வில் தனிமைப்படுத்திவிடாமல் காக்க வேண்டிய பொறுப்பும்கடமையும் தமிழக அரசுக்கு உண்டு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.