• தாமிரபரணியில் உயிர் நீத்தவர்களுக்கு IJK சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது

    1999 – ம் ஆண்டு ஜூலை 23-ம் தேதி அன்று திருநெல்வேலி மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டும் – சிறையில் வாடிய அப்பாவி தொழிலாளர்களை விடுவிக்கவும் நடத்திய பேரணியின் போது,காவல்துறை நடத்திய தடியடியிலிருந்து உயிர்தப்பிக்க ஓடியவர்கள் தாமிரபரணி ஆற்றில் குதித்தபோது 1½  வயது சிறுவன் விக்னேஷ் உள்ளிட்ட 17 பேர் நீரில் மூழ்கி இறந்தார்கள்.

    அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில்இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் மாண்பமை டாக்டர் பாரிவேந்தர் அவர்களின் ஆணைக்கிணங்ககட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் – எம்.எஸ்.ராஜேந்திரன்துணை பொதுச் செயலாளர் – நெல்லை ஜீவாதென் மண்டல அமைப்பு செயலாளர் – அன்னை இருதயராஜ்தென் மண்டல மகளிரணி செயலாளர் - லீலாபாய், நெல்லை மாவட்ட மகளிரணி செயலாளர் தங்கசெல்வி உள்ளிட்ட கட்சியின் பல்வேறு நிர்வாகிகளும் - நூற்றுக்கணக்கான தொண்டர்களும் திரளாக கலந்துகொண்டு ஊர்வலமாக சென்று தாமிரபரணி ஆற்றுக்குள் மலர்வளையம் வைத்துஇந்திய ஜனநாயக கட்சி சார்பில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.