• IJK-சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் வரும் 7-ம் தேதி முதல் நேர்காணல் நடைபெறும். - டாக்டர் பாரிவேந்தர் அறிவிப்பு

    நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில், இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட 234 தொகுதிகளுக்கும் 3672 பேர் விருப்பமனு அளித்துள்ளனர். இதில் 1176 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மகளிருக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு என்கின்ற கொள்கையினை வரும் சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர் அறிவிப்பின் போதே நிறைவேற்ற உள்ளோம்.

    எனவே, விருப்பமனு அளித்த அனைவரிடமும் வரும் 7-ம் தேதி திங்கட்கிழமை முதல் நேர்காணல் நடத்த உள்ளோம். இந்த நேர்காணலுக்கான அழைப்பு, மனு அளித்தவர்களுக்கு நேரடியாக தொலைபேசி வாயிலாக தெரியபடுத்தப்படும்.

    நேர்காணலுக்கு அழைக்கப்படுபவர்கள், கட்சியின் உறுப்பினர் அட்டை, வாக்களார் அடையாள அட்டை, இரண்டு வண்ணப்புகைப்படங்கள், கல்விச்சான்றிதழ், தனித்தொகுதி என்றால் சாதிச் சான்றிதழ் ஆகியவற்றுடன் குறிப்பிட்ட தேதியில் வருகை தரவேண்டும். இந்த நேர்காணல் நிகழ்ச்சி, சென்னை அசோக் நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் காலை 11.00 மணிமுதல் நண்பகல் வரையும், மீண்டும் மாலை 3.00 மணி முதல் 6.00 மணி வரையும் நடைபெறும்.