-
அனைத்துத்தரப்பட்ட மக்களும் எளிதில் ரயிலில் நீண்ட தூரம் பயணிப்பதுடன் – பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது - மத்திய ரயில்வே பட்ஜெட் குறித்து டாக்டர் பாரிவேந்தர் கருத்து
2016 - 17 ம் ஆண்டிற்கான மத்திய ரயில்வே பட்ஜெட்டில் டெல்லி மற்றும் சென்னையை மையமாக வைத்து புதிய ரயில்வே முனையம் அமைக்கப்படுமென்றும் – பயோமெட்ரிக் கழிவறைகள் - அனைத்து ரயில் நிலையங்களிலும் CCTV கேமரா பொருத்தப்படும் – ரயில்வே பணியாளர்களின் திறனை மேம்படுத்த ரயில்வே பல்கலைக்கழகம் – மூத்த குடிமக்களுக்கு 50 சதவீதம் கீழ்படுக்கை வசதி – ரயில் நிலையங்களில் முதியவர்களுக்கு பேட்டரி கார் – ரயில் நிலையங்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழகத்தின் நாகப்பட்டினம் – வேளாங்கண்ணி சேர்ப்பு – போன்ற அறிவிப்பு முழு மனதோடு அனைவராலும் வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
அதுபோல் காலங்காலமாக ரயில் நிலையங்களில் சுமை தூக்குபவர்களை இனி "உதவியாளர்கள்" என்று அழைக்கப்படும் அறிவிப்பும் – சென்னையில் புதிய ரயில் தொழிற்சாலை அமைக்கப்படும் - இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் ரயில் தானியங்கி மையம் தொடங்கப்படும் - அதுபோல் மாற்றுதிறனாளிகளுக்கு இணையதளமூலம் சக்கர நாற்காலிகள் முன்பதிவு – அனைத்து ரயில் நிலையங்களிலும் தானியங்கி டிக்கெட் எந்திரங்கள் – ஏழை மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் நீண்ட தூர பயணம் – ரயில் நிலையங்கள் அனைத்திலும் வெந்நீர் மற்றும் குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்க ஏற்பாடு – குறுந்தகவல் மூலம் (SMS) ரயில் பெட்டிகளை சுத்தம் செய்ய பணியாளர்களை அழைக்கலாம் – திடக்கழிவு மேலாண்மை மூலம் மனிதக்கழிவினை அகற்றுதல் – ரயில் பெட்டிகளில் GPS கருவி பொருத்துதல் போன்ற அறிவிப்பால் அனைத்துத்தரப்பட்ட மக்களும் எளிதில் ரயிலில் பாதுகாப்புடன் பயணம் செய்ய வழிவகுக்கும்.
மேலும் பெண்களை பாதுகாக்க சிறப்பு எண் வழங்கப்படுவதுடன் அதிகமான விபத்துக்களை ஏற்படுத்தும் ஆளில்லாத "லெவல் கிராசிங்" 2020 - க்குள் முற்றிலுமாக இருக்காது - பார்வையற்றோர்களுக்கு விரைவில் சிறப்பு பெட்டி அறிமுகம் – 139 என்ற எண் மூலம் டிக்கெட்டை ரத்து செய்யும் வசதி – ரயில் பயணிகளுக்கு காப்பீட்டு திட்டம் – அடுக்கு மாடி ரயில் போன்ற அறிவிப்புக்களால் பொதுமக்களும் – பெண்களும் – வயதானவர்களும் பயமின்றி ரயிலில் நீண்டதூரம் பயணம் செய்யலாம்.
மொத்தத்தில் அதிக கவர்ச்சியான அறிவிப்புக்கள் ஏதுமில்லாமல், தொலைநோக்கு பார்வையுடன் சாதாரண மக்கள் பயணடையும் நோக்கில் இன்றைய ரயில்வே பட்ஜெட் அமைந்துள்ளதை இந்திய ஜனநாயகக் கட்சி வரவேற்பதுடன் – அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் காலதாமதமின்றி நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என மத்திய அரசினை வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன்.