• அனைத்து மக்களுக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்ய உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் - தமிழக அரசிற்கு டாக்டர் பாரிவேந்தர் கோரிக்கை

    கடந்த 2013 ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட தேசிய உணவு பாதுகாப்பு சட்ட்த்தின் மூலம் உணவு ஓர் அடிப்படை மனித உரிமையாக உறுதிசெய்யப்பட்டது. இதனை ஏற்று புதுடெல்லி – அரியானா – இமாச்சலபிரதேசம் – ராஜஸ்தான் – கர்நாடகம் – பஞ்சாப் – சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் இச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளபோதும் – தமிழக அரசு இச்சட்டத்தின் மீது கவனம் செலுத்தாதது ஏன் என புரிந்துகொள்ளமுடியவில்லை.

    இச்சட்டம் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டால் கிராமபுறங்களில் ஏறக்குறை 75 சதவீதத்தினரும், நகர்புறத்திலுள்ள 50 சதவீதத்தினருக்கும் தடையில்லாமல் உணவு கிடைக்க வாய்ப்புள்ளது. இச்சட்டத்தினால் ஆதரவற்றோர் – இயற்கை பேரழிற்கு ஆளானோர் – பட்டினியால் வாடுவோர் என நலிந்த பிரிவினர் நேரிடையாக பயனடைவார்கள். அத்துடன் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளோர்களுக்கும் உணவு கிடைக்க இச்சட்டம் வழிவகுக்கும்.

    உணவு பாதுகாப்பு சட்டத்தின் மூலம் உணவு தானியங்களை நீண்ட நாட்களுக்கு சேமித்து வைக்கவும் – பதப்படுத்தி வைக்கவும் வழிவகுப்புதுடன், பருவநிலை மாற்றங்கள் ஏற்பட்டு உணவு தானிய உற்பத்தி குறைந்தாலும் அனைவருக்கும் தடையில்லாமல் உணவளிக்க முடியும். இதனை கருத்தில் கொண்டு இச்சட்டத்தினை உடனடியாக நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்