-
IJK சார்பில் போட்டியிட பிப்ரவரி 01 -ம் தேதி முதல் வேட்பாளர் விருப்ப மனுக்கள் பெறப்படும் டாக்டர் பாரிவேந்தர் அறிவிப்பு
ஊழலற்ற தமிழகம் உருவாகவும், மதுவில்லா தமிழகம் மலரவும், வாக்களர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி, தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் – புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வேட்பாளர் விருப்ப மனுக்கள் பெறப்பட உள்ளன.
பொதுத்தொகுதி வேட்பாளர் விருப்பமனு கட்டணம் ரூபாய் ஆயிரம் எனவும், மகளிர் –தனித்தொகுதி மற்றும் புதுச்சேரி தொகுதிகளுக்கான விருப்ப மனு கட்டணம் ரூபாய் ஐநூறு எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தொகுதிகளில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள், கட்சித் தலைமை அலுவலகத்தில் அதற்கான கட்டணத்தை செலுத்தி மனுக்களை பெற்றுக்கொள்ளலாம்.
வரும் 1-ம் தேதி முதல் விருப்பமனுக்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விருப்பமனுக்களை பிப்ரவரி 10-ம் தேதிக்குள் தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். பின்னர் விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டு, வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.