மக்களாட்சி தத்துவத்திற்கு இலக்கணமாகவும் – உலகிலேயே அதிக மக்கள் தொகையை கொண்ட மாபெரும் குடியரசு நாடாக திகழ்கின்றது இந்தியா.
குடியரசு அடைந்து பல ஆண்டுகளாகியும், எல்லா துறைகளிலும் ஊழலும் – லஞ்சமும் பல்கி பெருகியுள்ளதால் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் சற்று பின்னடைவு ஏற்பட்டிருப்பது வருத்தமளித்தாலும், ஒருநாடு வளர்ச்சியடையை அரசு மட்டுமல்லாது – அனைத்துத்தரப்பட்ட பொதுமக்களும் தங்களின் முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்.
ஜாதி – மதம் – இனம் – மொழி என்று நாம் வேறுபட்டிருந்தாலும், கலாச்சாரம் – பண்பாடு ஆகியவற்றால் நாம் ஒன்றுபட்டு வாழவேண்டும்.
ஒரு தேசத்தின் வளர்ச்சி என்பது கல்வி வளர்ச்சி அடிப்படையை கொண்டே தீர்மானிக்கப்படுகின்றது. கல்வி நிலையங்கள் என்பது மாணவர்களுக்கு கல்வியுடன் சேர்த்து ஒழுக்கத்தையும் – மனித நேயத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும். எக்காராணத்தையும் கொண்டு கல்வி வளாகங்களில் சாதி – மத மோதல்களுக்கு அனுமதி அளிக்க கூடாது.
நாடு குடியரசு அடைந்து தனது 67-வது ஆண்டை கொண்டாடும் வேலையில் 65 கோடி இளைஞர்களை கொண்ட இந்திய தேசம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைவதுடன், கலாச்சார சீரழிவிற்கு முழுக்காரணமாக உள்ள மதுவை ஒழித்தும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற தார்மீக முழுக்கத்தை தொடர்ந்து முன்வைத்தும் நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் தீவிரவாதம் – வன்முறை ஆகியவற்றை ஒழித்தும், இந்திய தேசம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடைந்து, தீவிவரவாதம் – வன்முறை - கலாச்சார சீரழிவு இல்லாத வல்லரசு இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் தொடர்ந்து பாடுபடவேண்டும் எனவும் உலகெங்கும் வாழும் அனைத்து இந்தியர்களுக்கு எனது உளமார்ந்த நாட்டின் 67-வது குடியரசு தினவாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
Powered by iPOT Technologies