Loading...

செய்திகள்

Nov 27, 2026
News Image

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு வரவேற்கத்தக்கது உச்சநீதிமன்ற உத்தரவைமுழுமையாக நடைமுறைப்படுத்தத்தேவையான அனைத்துநடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இந்திய ஜனநாயகக் கட்சித்தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து அறிக்கை

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு வரவேற்கத்தக்கது நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.. இனியும் அலட்சியம் செய்யக்கூடாது உச்சநீதிமன்ற உத்தரவை முழுமையாக நடைமுறைப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து அறிக்கை திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள தீபத்தூணில் நாளை (28.11.2026) தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி மிகுந்த மகிழ்ச்சியையும், வரவேற்பையும் அளிக்கிறது. ஏற்கனவே தீபம் ஏற்றுவதற்கு உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால அனுமதி நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், தற்போது மீண்டும் தீபம் ஏற்ற உத்தரவிட்டுள்ளதோடு, சட்டம் ஒழுங்கையும், அமைதியையும் மத்திய ரிசர்வ் காவல் படையினர் உறுதி செய்ய வேண்டும் என்றும், கோயில் அறங்காவலர் குழுவைத் தற்காலிகமாகக் கலைக்கவும் உத்தரவிட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி கவனத்திற்குரியது. நீதிமன்ற உத்தரவுகளை மதித்து நடைமுறைப்படுத்துவது ஓர் அரசின் அடிப்படைக் கடமையாகும். மக்களின் வழிபாட்டு உரிமைகளையும், மத உணர்வுகளையும் மதித்துப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் அரசுக்கு உள்ளது. எனவே, தமிழக அரசு கடந்தகால அணுகுமுறைகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, இம்முறையாவது எவ்விதத் தடங்கலுமின்றி உச்சநீதிமன்ற உத்தரவை முழுமையாக நடைமுறைப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். நீதிமன்றத்தின் மாண்பையும், மக்களின் வழிபாட்டு உரிமையையும், சமூக நல்லிணக்கத்தையும் ஒருசேரப் பாதுகாக்க வேண்டிய தனது பொறுப்பைத் தமிழக அரசு, இம்முறையாவது உணர்ந்து செயல்பட வேண்டும் என இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன். அன்புடன் டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர்‘ இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

Back to News