தமிழகத்தின் நீர் உரிமைகளுக்கு அடுத்தடுத்து எழும் சவால்கள்... தமிழக நலன்களுக்கு எதிரான மனநிலையில் செயல்படும் கர்நாடக அரசின் செயல்பாடுகள் ஏற்புடையதல்ல.. தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.. காவிரி – வைகை – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து வலியுறுத்தல் காவிரி – வைகை – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நீர்ப்பாசனத் திட்டங்களுக்குத் தடை விதிக்கக் கோரி, கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி மிகுந்த கவலையளிக்கிறது. ஒருபுறம் மேகதாது அணையைக் கட்டுவதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தி வரும் கர்நாடக அரசு, மறுபுறம் தமிழகத்தின் நீர்ப்பாசனத் திட்டங்களுக்கும் தடை கோரியிருப்பது தமிழகத்தின் நீர் உரிமைகள் குறித்த கவலையை மேலும் அதிகரித்துள்ளது.. காவிரி – வைகை – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம் என்பது வெறும் நீர்ப்பாசனத் திட்டம் மட்டுமல்ல, வறட்சியால் பாதிக்கப்படும் மாவட்டங்களின் நீராதாரத்தை மேம்படுத்தவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் உருவாக்கப்பட்ட நீண்டகாலக் கனவுத் திட்டமாகும். இவ்விவகாரத்தில் தமிழக அரசு காலதாமதமின்றி நீர்வளத்துறை நிபுணர்கள் மற்றும் மூத்த சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி, உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்தின் உரிமைகளை உரிய ஆதாரங்களுடன் நிலைநாட்ட வேண்டும். மேலும் காவிரி – வைகை – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.. தமிழக விவசாயிகளின் நம்பிக்கையையும், எதிர்காலத் தலைமுறையின் நீராதாரத்தையும் பாதுகாக்கும் வகையில், தமிழக அரசு இவ்விவகாரத்தில் தனிக்கவனம் செலுத்தி, விரைவான, உறுதியான மற்றும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன். அன்புடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)
Powered by iPOT Technologies