Loading...

செய்திகள்

Nov 20, 2026
News Image

அரியலூரில்மூன்று வயது சிறுமி மர்ம மரணம் சிறுமியின்மரணத்தில் உள்ள மர்மத்தை வெளிக்கொண்டுவந்து,அவரதுகுடும்பத்திற்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.. தமிழகஅரசுக்கு இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர்டாக்டர்ரவிபச்சமுத்து வேண்டுகோள்...

அரியலூரில் மூன்று வயது சிறுமி மர்ம மரணம் சிறுமியின் மரணத்தில் உள்ள மர்மத்தை வெளிக்கொண்டுவந்து, அவரது குடும்பத்திற்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.. தமிழக அரசுக்கு இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து வேண்டுகோள்... அரியலூர் மாவட்டம், சிலுப்பனூர் கிராமத்தில் காணாமல் போன மூன்று வயது சிறுமி, மர்மமான முறையில் குட்டையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் அளிக்கிறது. சிறுமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து முழுமையான, வெளிப்படையான விசாரணையை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும். மேலும், கிராமப்புறங்களில் குடியிருப்புகளுக்கு அருகிலுள்ள ஆபத்தான நீர்நிலைகள், திறந்தவெளிக் கிணறுகள் மற்றும் பள்ளங்களைக் கண்டறிந்து, தேவையான இடங்களில் பாதுகாப்பு வேலிகள், மூடிகள் மற்றும் எச்சரிக்கைப் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்து இல்லாத இடங்களில் அமைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்... விளையாடி மகிழ வேண்டிய வயதில் ஒரு பிஞ்சுக் குழந்தை உயிரிழந்திருப்பது நெஞ்சைப் பதற வைக்கிறது. சிறுமியின் பிரேதப் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலும், உரிய தடயவியல் ஆதாரங்களின் அடிப்படையிலும் விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும். மேலும், சிறுமியின் மரணத்தில் உள்ள மர்மத்தை வெளிக்கொண்டுவந்து, அவரது குடும்பத்திற்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதோடு, இதுபோன்ற துயரச் சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்கத் தமிழக அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.. தங்கள் அன்புக் குழந்தையை இழந்து மீளாத்துயரில் வாடும் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் எனது சார்பிலும்,இந்திய ஜனநாயகக் கட்சி சார்பிலும் தெரிவித்துக்கொள்கின்றேன். வருத்தங்களுடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

Back to News