இல்லங்கள் தோறும் தீபம் ஒளிரட்டும்... இதயங்கள் தோறும் அன்பு மலரட்டும்.. அனைத்து மக்கள் இல்லங்களிலும் மகிழ்ச்சியும் வளமையும் பெருகட்டும்... இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் டாக்டர் இரவிபச்சமுத்து அவர்களின் தீபாவளி திருநாள் வாழ்த்துச் செய்தி... இருள் அகன்று ஒளி பிறப்பதுபோல், இன்னல்கள் மறைந்து இன்பங்கள் பெருகிடவும், கவலைகள் கரைந்து மகிழ்ச்சிகள் மலர்ந்திடவும், ஒவ்வொரு இல்லத்திலும் அன்பும், அமைதியும், ஆனந்தமும் நிறைந்திடவும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தீபாவளி என்பது வெறும் தீபங்களை ஏற்றும் திருநாள் மட்டுமல்ல... அனைத்து மக்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளியேற்றும் நாள். மக்களின் இதயத்தில் மகிழ்ச்சியை விதைக்கும் நாள். மனிதநேயத்தையும், சகோதரத்துவத்தையும், சமத்துவத்தையும் போற்றும் பொன்னாள். உழைக்கும் மக்களின் வியர்வைக்கு உரிய மரியாதையும், விவசாயிகளின் உழைப்புக்கு வளமான வாழ்வும், இளைஞர்களின் கனவுகளுக்கு வெற்றியும், பெண்களின் வாழ்வில் பாதுகாப்பும், குழந்தைகளின் எதிர்காலத்தில் ஒளிமயமான நம்பிக்கையும், இந்த தீப ஒளி திருநாளில் பிறக்கட்டும்... சாதி, மதம், மொழி கடந்து மனிதநேயம் மலரட்டும்.. பாரத தேசத்தில் வேற்றுமைகள் மறைந்து ஒற்றுமை வளரட்டும்.. வறுமை அகன்று வளமை பெருகட்டும்!!! இல்லங்கள் தோறும் தீபம் ஒளிரட்டும்.. இதயங்கள் தோறும் அன்பு மலரட்டும்! அனைத்து மக்கள் இல்லங்களிலும் மகிழ்ச்சியும் வளமையும் பெருகட்டும்!!! அனைவருக்கும் எனது இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகளை எனது சார்பிலும், இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பிலும் தெரிவித்துக்கொள்கின்றேன். வாழ்த்துக்களுடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)
Powered by iPOT Technologies