மருது பாண்டியர் சகோதரர்களின் குருபூஜை நாளில், அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் தலைவணங்கிப் போற்றி, இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் எனது புகழஞ்சலியையும் வீரவணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் IJK தலைவர் டாக்டர் இரவிபச்சமுத்து அறிக்கை சுதந்திர வேள்வியில் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்து, தமிழர்களின் வீரத்தையும் மானத்தையும் உலகறியச் செய்த மாவீரர்கள் மருது பாண்டியர் சகோதரர்களுக்கு வீரவணக்கம்.. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில், ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக வீரத்துடனும் துணிச்சலுடனும் போராடி, தாய்நாட்டின் விடுதலைக்காகத் தங்கள் இன்னுயிரையே அர்ப்பணித்த மாவீரர்கள் பெரிய மருது, சின்ன மருது பாண்டியர் சகோதரர்களின் நினைவைப் போற்றும் இந்நாளில், அவர்களுக்கு எனது வீர வணக்கத்தைச் செலுத்துகிறேன். மண்ணின் மானம் காக்கவும், மக்களின் உரிமைகளை மீட்கவும், அடிமைத்தனத்தின் சங்கிலிகளை உடைத்தெறியவும் ஆயுதமேந்திப் போராடிய மருது பாண்டியர்கள், தமிழர்களின் வீரத்திற்கும் - தியாகத்திற்கும் என்றும் அழியாத அடையாளங்களாகத் திகழ்கின்றனர். 1801ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மக்களை ஒன்றிணைக்கும் விடுதலைப் பிரகடனத்தை வெளியிட்டு, சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து ஒற்றுமையுடன் போராட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர்களின் தொலைநோக்குச் சிந்தனை இன்றைய தலைமுறைக்கும் வழிகாட்டியாக அமைந்துள்ளது. வீரத்தை விதைத்தவர்கள் மருது பாண்டியர்கள்... விடுதலை உணர்வை வளர்த்தவர்கள் மருது பாண்டியர்கள். மண்ணுக்காக உயிர் கொடுத்தாலும் மானத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்காத தமிழினத்தின் வீர வரலாற்றை எழுதியவர்கள் மருது பாண்டியர்கள்.... அவர்கள் போராடிப் பாதுகாக்க நினைத்த மண்ணும், நீரும், இயற்கை வளங்களும், மக்களின் உரிமைகளும் இன்றும் பாதுகாக்கப்பட வேண்டிய நமது வரலாற்றுக் கடமைகளாகும். மருது பாண்டியர் சகோதரர்களின் குருபூஜை நாளில், அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் தலைவணங்கிப் போற்றி, எனது சார்பிலும், இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பிலும், புகழஞ்சலியையும் வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். வீரம் வாழ்க! தியாகம் வெல்க! மருது பாண்டியர்களின் புகழ் ஓங்குக! அன்புடன் டாக்டர் ரவி பச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)
Powered by iPOT Technologies