Loading...

செய்திகள்

Oct 19, 2026
News Image

உழைப்பை போற்றும் ஆயுதபூஜைத் திருநாளில் தொழில்கள் செழிக்கட்டும்... வாழ்வில் வளங்கள் பெருகட்டும்...! வெற்றிகளை அருளும்விஜயதசமி நன்னாளில் புதிய முயற்சிகள் மலரட்டும்... அனைவரது வாழ்விலும்மகிழ்ச்சி பொங்கட்டும்... IJK தலைவர் டாக்டர் இரவிபச்சமுத்து அவர்களின் ஆயுத பூஜை மற்றும்விஜயதசமி திருநாள் வாழ்த்துச்செய்தி..

உழைப்பை போற்றும் ஆயுத பூஜைத் திருநாளில் தொழில்கள் செழிக்கட்டும்... வாழ்வில் வளங்கள் பெருகட்டும்...! வெற்றிகளை அருளும் விஜயதசமி நன்னாளில் புதிய முயற்சிகள் மலரட்டும்... அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும்... IJK தலைவர் டாக்டர் இரவிபச்சமுத்து அவர்களின் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாள் வாழ்த்துச்செய்தி .. உழைப்பை உயர்வாகவும், தொழிலை தெய்வமாகவும், அறிவை அழியாத செல்வமாகவும் போற்றும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உழைப்பே உயர்வின் அடித்தளம், தொழிலே வாழ்வின் ஆதாரம்! அறிவே முன்னேற்றத்தின் ஆயுதம்! என்ற உயரிய தத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் சிறப்புமிக்க திருநாளாக ஆயுத பூஜை விளங்குகிறது. விவசாயிகளின் கலப்பை முதல் தொழிலாளர்களின் கருவிகள் வரை, மாணவர்களின் புத்தகங்கள் முதல் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் வரை, மனித வாழ்க்கையின் முன்னேற்றத்திற்குத் துணைநிற்கும் அனைத்தையும் போற்றி வணங்கும் பண்பாட்டுத் திருநாளே ஆயுத பூஜையாகும். ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பது உழைக்கும் கரங்களின் உயர்விலும், தொழில்களின் முன்னேற்றத்திலும், கல்வியின் வளர்ச்சியிலும்தான் அடங்கியுள்ளது. நாட்டிற்கு உணவளிக்கும் விவசாயிகள், தொழில் வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் தொழிலாளர்கள், பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வணிகர்கள், அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்கள், எதிர்கால இந்தியாவை வடிவமைக்கும் மாணவர்கள் என அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் பெருக வேண்டும். அறியாமையை அகற்றி அறிவை வளர்க்கும் விஜயதசமி திருநாள், ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் புதிய முயற்சிகளுக்கும், புதிய சாதனைகளுக்கும், வெற்றிகரமான தொடக்கங்களுக்கும் வழிவகுக்கட்டும். இந்த இனிய ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாளில் தமிழக மக்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கவும், தொழில்கள் சிறக்கவும், செல்வம் செழிக்கவும், வாழ்வில் வெற்றிகள் தொடரவும், இந்திய ஜனநாயகக் கட்சி சார்பிலும், எனது சார்பிலும் அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன் வாழ்த்துககளுடன் டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயக கட்சி (IJK)

Back to News