Loading...

செய்திகள்

Oct 16, 2026
News Image

இந்திய ஜனநாயகக் கட்சியின் தருமபுரி மாவட்டம்,பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியின் பொருளாளர்மறைவிற்கு IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து இரங்கல்

இந்திய ஜனநாயகக் கட்சியின் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியின் பொருளாளர் மறைவிற்கு IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து இரங்கல் இந்திய ஜனநாயகக் கட்சியின் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி பொருளாளராகப் பொறுப்பு வகித்து வந்த அன்புச் சகோதரர் திரு. லோகநாதன் அவர்கள் இன்று (16.10.2026) காலை திடீர் மாரடைப்பால் காலமானார் என்ற துயரச் செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன். இந்திய ஜனநாயகக் கட்சியின் கொள்கைகளின் மீது பற்றும், தலைமை மீது நம்பிக்கையும் கொண்டு, கட்சியின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து பணியாற்றி வந்த திரு. லோகநாதன் அவர்களின் திடீர் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. ஒரு அரசியல் இயக்கத்தின் உண்மையான பலம், அதன் அடிமட்ட நிர்வாகிகளின் அர்ப்பணிப்பும் உழைப்பும்தான். அந்த வகையில், பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியில் கட்சிப் பணிகளை முன்னெடுத்து வந்த திரு.லோகநாதன் அவர்களின் இழப்பு, அவரது குடும்பத்தினருக்கு மட்டுமின்றி, இந்திய ஜனநாயகக் கட்சிக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். வாழ்க்கையின் பல்வேறு பொறுப்புகளுக்கு மத்தியில் பொதுவாழ்விலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு பணியாற்றிய ஓர் இயக்க நிர்வாகியை இழந்திருப்பது மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துகிறது. அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி மற்றும் தருமபுரி மாவட்ட இந்திய ஜனநாயகக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அன்புச்சகோதரரின் ஆன்மா இறைவனடி நிழலில் இளைப்பாற இறைவனை வேண்டுகின்றேன். இந்தத் துயரமான தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கு உறுதுணையாக இந்திய ஜனநாயகக் கட்சி என்றும் துணை நிற்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன். வருத்தங்களுடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

Back to News