Loading...

செய்திகள்

Oct 16, 2026
News Image

மாண்புமிகு அண்ணன் திரு. நயினார்நாகேந்திரன் அவர்களுக்குஇதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து வாழ்த்து

மாண்புமிகு அண்ணன் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து வாழ்த்து தமிழக அரசியல் களத்தில் நீண்டகால அனுபவத்தையும், மக்கள் பணியில் தனித்துவமான அடையாளத்தையும் கொண்டுள்ள தாங்கள், அமைச்சராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் பல்வேறு பொறுப்புகளை வகித்து, இன்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநிலத் தலைவராகச் சிறப்புடன் செயலாற்றி வருவது பாராட்டுக்குரியது. அரசியலில் அனுபவம் என்பது காலத்தால் கிடைப்பது, மக்கள் மனதில் நம்பிக்கையை பெற்று, மக்கள் பணிகளின் அர்ப்பணிப்பால் கிடைப்பது. அந்த வகையில், தங்களின் நீண்டகால அரசியல் பயணமும், பொதுவாழ்வில் கொண்டுள்ள ஈடுபாடும் சிறப்புக்குரியவை. தமிழக மக்களின் நலன், மாநிலத்தின் வளர்ச்சி, சமூக நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கான தங்களின் பணிகள் மேலும் சிறக்கட்டும். மக்கள் சேவை என்ற உயரிய இலட்சியத்துடன் தங்களின் அரசியல் பயணம் மேலும் பல சாதனைகளையும் வெற்றிகளையும் படைக்கட்டும். இந்த இனிய பிறந்தநாளில், தாங்கள் நீண்ட ஆயுளுடனும், நல்ல உடல்நலத்துடனும், மனமகிழ்ச்சியுடனும் வாழ்ந்து, பொதுவாழ்வில் மேலும் பல உயரங்களை அடைய, எனது சார்பிலும் - இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பிலும் தெரிவித்து இதயபூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்... வாழ்த்துக்களுடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

Back to News