Loading...

செய்திகள்

Oct 02, 2026
News Image

அகிம்சை எனும் அறத்தால் உலகை வென்ற மகாத்மாவை போற்றுவோம் IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து காந்தி ஜெயந்தி வாழ்த்து

உண்மை, அகிம்சை, எளிமை, நேர்மை, மனிதநேயம் ஆகிய உயரிய நெறிகளைத் தனது வாழ்நாள் முழுவதும் கடைபிடித்து, இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு புதிய பாதையை வகுத்த தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளில், அவரது தியாகத்தையும் தேசப்பற்றையும் நினைவுகூர்ந்து போற்றி வணங்குவோம். ஆயுதங்களைவிட அகிம்சையும், அதிகாரத்தைவிட அறமும் வலிமையானவை என்பதை உலகிற்கு உணர்த்தியவர் மகாத்மா காந்தியடிகள். கிராமங்களின் வளர்ச்சி, சமூக ஒற்றுமை, தூய்மை, சுயசார்பு, ஏழை எளிய மக்களின் முன்னேற்றம் ஆகியவற்றை முன்னிறுத்திய அவரது சிந்தனைகள் இன்றும் நமக்கு வழிகாட்டுகின்றன. வேற்றுமைகளைக் கடந்து அன்பு, சகோதரத்துவம், சமத்துவம் ஆகியவற்றை வளர்த்து, அமைதியும் மனிதநேயமும் நிறைந்த இந்தியாவை உருவாக்க இந்த நன்னாளில் உறுதியேற்போம். அகிம்சையை ஆயுதமாக்கி, சத்தியத்தைப் பாதையாக்கி, தேசத்தின் விடுதலைக்கு வழிகாட்டிய மகாத்மாவின் புகழ் என்றும் மக்களின் மனங்களில் நீங்கா நிலைத்திருக்கும்.. அனைவருக்கும் எனது மனமார்ந்த காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துகளை இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கின்றேன். அன்புடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

Back to News