திருவள்ளூர் அருகே, இறால் பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் மரணம் மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. தங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரமாக இருந்த தொழிலாளர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இவ்விபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் அனைத்து தொழிலாளர்களும் விரைவில் பூரண குணமடைந்து தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்று இறைவனை பிராத்திக்கிறேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணமும், பாதிக்கப்பட்டோர்க்கு சிறந்த மருத்துவ சிகிச்சையும் வழங்குவதோடு, இத்தகைய துயரமான சம்பவங்கள் மீண்டும் நிகழாத வகையில், சம்பவம் தொடர்பாக அரசு விரிவான விசாரணை மேற்கொண்டு, தொழிற்சாலைகளில் பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என இந்திய ஐனநாயகக் கட்சியின் சார்பில் கேட்டு கொள்கின்றேன். வருத்தங்களுடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)
Powered by iPOT Technologies