இந்திய ஜனநாயகக் கட்சியின் முதல் உறுப்பினரும் – பொருளாருமான மூத்த வழக்கறிஞர் ஐயா G.ராஜன் அவர்கள் இன்று திடீரென்று ஏற்பட்ட உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி இறைவனடி சேர்ந்தார் என்கிற செய்தியை மிகுந்த வருத்தத்துடனும் – தாங்கொணா துயரத்துடனும் தெரிவிக்கின்றேன். இந்திய ஜனநாயகக் கட்சிக்கும் பார்க்கவகுல முன்னேற்ற சங்கத்திற்கும் முதுகெலும்பாக திகழ்ந்தவர் – கட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் – அனைவருக்கும் முன்னோடியாகவும் இருந்தவர். கட்சி துவங்கிய நாள் முதல் பொருளாளராக சிறப்பாக தனது பங்களிப்பை அளித்தவர். இளம் வயதிலேயே அரசியல் ஆர்வமும் – சமூக பற்றும் மிக்கவர். திமுக கலைஞர் ஆட்சியில் அரசு வழக்கறிஞராக திறம்பட செயலாற்றி கலைஞரின் நன்மதிப்பை பெற்றவர். ஈடில்லா சிறப்புகளை பெற்ற ஐயா ராஜன் அவர்களின் மறைவு நமக்கெல்லாம் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவர் காட்டிய நல்வழியில் நாம் தொடர்ந்து பயணிப்பது ஒன்றே நாம் அவருக்கு செய்யும் மரியாதையாகும். ஐயா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் – உறவினர்களுக்கும் – நண்பர்களுக்கும் – இந்திய ஜனநாயகக் கட்சி தொண்டர்களுக்கும் மற்றும் பார்க்கவகுல முன்னேற்ற சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தினையும் தெரிவித்துக் கொள்வதோடு, ஐயா அவர்களின் ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற வேண்டுகின்றேன். வருத்தங்களுடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)
Powered by iPOT Technologies