Loading...

செய்திகள்

Jun 17, 2026
News Image

தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதை மிகவும் சிறப்பான நடவடிக்கையாக கருதினாலும், புதிய நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி எவ்வாறு திரட்டப்படும் என்பது குறித்து அரசுக்கு தெளிவான பார்வையும், சரியான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் தமிழக அரசுக்கு IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து வேண்டுகோள்

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ள நிதிநிலை வெள்ளை அறிக்கை, மாநிலத்தின் தற்போதைய நிதி நிலை, கடன் சுமை மற்றும் எதிர்கால பொருளாதார சவால்கள் குறித்து மக்களிடம் வெளிப்படையாக எடுத்துரைக்கும் ஆவணமாக அமைந்துள்ளது. மேலும், நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதை மிகவும் சிறப்பான நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. இந்த வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிதி சவால்களை கருத்தில் கொண்டு, வரும் ஆண்டுகளில் செயல்படுத்தப்பட உள்ள வளர்ச்சித் திட்டங்கள், மக்கள் நலனையும், மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றத்தையும் உறுதி செய்யும் வகையில் இருக்குமாறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முன்பிருந்த அரசு சில செலவுகளை குறைத்து, வரவுகளை உயர்த்திக் காட்டியிருப்பதாகவும், அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.78,324 கோடியாகவும், நிதிப் பற்றாக்குறை ரூ.1.33 லட்சம் கோடியாகவும் இருக்கும் என தமிழக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை சமாளிக்கவும், ஏற்கனவே வாங்கிய கடன்களை அடைக்கவும், வரும் ஆண்டில் ரூ.2 லட்சம் கோடி கடன் வாங்க வேண்டியிருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, நிதிநிலை வெள்ளை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள சவால்களுக்கு உரிய தீர்வுகளை வகுத்து, வருங்காலங்களில் அறிவிக்கப்பட உள்ள வளர்ச்சித் திட்டங்களையும், வாக்குறுதிகளையும் நடைமுறைப்படுத்துவதற்கான விரிவான செயல்திட்டத்தை மேற்கொள்ள வேண்டும். மாநிலத்தின் நிதி நிலை அழுத்தத்தில் இருக்கும் சூழலில், புதிய நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி எவ்வாறு திரட்டப்படும் என்பது குறித்து அரசுக்கு தெளிவான பார்வையும், சரியான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கின்றேன். அன்புடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

Back to News