தொடர்ச்சியாக போராடி வரும் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதும், அவர்களின் பொருளாதாரச் சுமையை குறைப்பதும் அரசின் முதன்மைக் கடமையாகும். தேர்தல் காலத்தில் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாக பயிர்கடன் முழுமையாக தள்ளுபடி இடம்பெற்றிருந்தது. தற்பொழுது ரூ. 75,000 வரை மட்டுமே தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ளது. ஏற்கனவே இயற்கை சீற்றங்கள், பருவமழை மாற்றங்கள், உற்பத்திச் செலவுகளின் உயர்வு மற்றும் சந்தை விலைகளின் ஏற்றத்தாழ்வுகளால் தமிழக விவசாயிகள் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில், கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிர்கடன்கள் அவர்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளன. எனவே, விவசாயிகளின் தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்தில்கொண்டு, தமிழக அரசு பயிர்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்து, விவசாயிகளின் நலனை உறுதி செய்ய வழிவகை செய்ய வேண்டும். மேலும், எதிர்காலத்தில் விவசாயிகள் கடன் சுமையில் சிக்காத வகையில் நிலையான வேளாண் கொள்கைகளையும் அரசு உருவாக்க வேண்டும். விவசாயிகளின் நலனே நாட்டின் வளர்ச்சிக்கான அடித்தளம் என்பதை அரசு உணர்ந்து, தாமதமின்றி சிறு, குறு விவசாயிகள் பெற்றுள்ள பயிர்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யவேண்டும் என கேட்டுகொள்கிறேன். அன்புடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)
Powered by iPOT Technologies