Loading...

செய்திகள்

Jun 04, 2026
News Image

பாஜக முன்னாள் தலைவர் அன்புச்சகோதரர் அண்ணாமலை அவர்களின் பிறந்தநாளுக்கு IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து அவர்களின் வாழ்த்துச்செய்தி

value="தமிழக அரசியல் களத்தில் நேர்மையும், துணிவும், மக்கள் நலனும் கொண்ட தலைவராக திகழும் அண்ணாமலை அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து, படிப்பில் சிறந்து, இந்திய குடியியல் பணிகள் தேர்வில் வெற்றி பெற்று, காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக பொறுப்பேற்று, பின்னர் காவல் துணை ஆணையராக பதவி உயர்வு பெற்றவர். மக்கள் சேவைக்காகவும் – தமிழக மக்களின் நலனுக்காகவும் தான் வகித்து வந்த இந்திய காவல்துறை பணியை துறந்து வந்த பெருமைக்குரியவர். அவரது அர்ப்பணிப்புமிக்க பொதுப்பணி, அரசியல் பணி, இளைஞர்களுக்கு அளித்து வரும் ஊக்கம் மற்றும் தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக மேற்கொண்டு வரும் சேவைகள் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன். நீண்ட ஆயுளும், நல்ல ஆரோக்கியமும், எல்லா நலன்களும் பெற்று மக்கள் சேவையில் தொடர்ந்து சிறப்புடன் செயல்பட வாழ்த்துகளைத் தெரிவித்து, அன்பு சகோதரர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை எனது சார்பிலும், இந்திய ஜனநாயகக் கட்சி சார்பிலும் தெரிவித்துக்கொள்கிறேன் வாழ்த்துக்களுடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)"

Back to News