Loading...

செய்திகள்

May 30, 2026
News Image

தமிழ்த்திரையுலக முன்னணி நடிகரும் – கார் பந்தய வீரருமான நடிகர் அஜித்குமார் அவர்களின் தாயார் மறைவுக்கு IJK தலைவர் டாக்டர் இரவி பச்சமுத்து இரங்கல்

தமிழ்த்திரையுலக முன்னணி நடிகரும் – கார் பந்தய வீரருமான நடிகர் அஜித் குமாரின் தாயார் திருமதி. மோகினி அம்மையார் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இன்று இறைவனடி சேர்ந்தார் என்கிற செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தோம். தனது இளம் பருவத்திலிருந்து கடுமையாக உழைத்து, முன்னணி நடிகர் – கார் பந்தய வீரர் என சகோதரர் அஜித்குமார் அவர்களின் ஒவ்வொரு வெற்றியின் பின்னிருந்த தாயாரின் இழப்பு அவருக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அன்னையை இழந்து வாடும் அன்புச்சகோதரர் அஜித்குமார் அவர்களுக்கும் – அவரது குடும்பத்தாருக்கும் எனது சார்பிலும் – இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு, அன்னையின் ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற வேண்டுகின்றேன். வாழ்த்துக்களுடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

Back to News