Loading...

செய்திகள்

Apr 30, 2026
News Image

உழைக்கும் கைகள் உயர்ந்திட, உழைப்பின் குரல் ஒலித்திட, சமத்துவம் நிறைந்த சமூகத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைவோம். IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து மே தின வாழ்த்து செய்தி

உலகத் தொழிலாளர் தினமான இந்த மே தினத்தில், உழைப்பின் பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்டும் அனைத்து தொழிலாளர் சகோதரர்களுக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உழைப்பே உயர்வு என்ற பொன்மொழி வெறும் சொல் அல்ல. அது மனித முன்னேற்றத்தின் அடிப்படை உண்மை. வியர்வை சிந்தாத வெற்றி நிலைத்திருக்காது என்பதுபோல், ஒவ்வொரு சாதனையின் பின்னாலும் உழைப்பாளியின் அமைதியான போராட்டம் மறைந்துள்ளது. இந்த நாள், தொழிலாளர்களின் உரிமைக்காக நடைபெற்ற வரலாற்றுப் போராட்டங்களை நினைவுகூரும் நாள் மட்டுமல்ல, சமத்துவம் - சமதர்மம் மற்றும் மனித உழைப்பிற்கான மரியாதை நிலைநாட்டப்பட வேண்டிய நாளும் ஆகும். உழைப்பே உலகின் அடித்தளம். உழைக்கும் மனிதர்களின் அர்ப்பணிப்பு, வியர்வை, உறுதி ஆகியவை தான் சமூக முன்னேற்றத்தின் உண்மையான சக்தி. ஒற்றுமையே பலம். இந்த உண்மையை மனதில் கொண்டு, தொழிலாளர்கள் ஒன்றுபட்டால் எந்த அநீதியையும் மாற்ற முடியும். இந்த மே தினம், தொழிலாளர்களின் ஒற்றுமையையும், உரிமைக்கான போராட்டங்களையும் மேலும் வலுப்படுத்தும் நாளாக அமையட்டும் என்பதோடு, இந்த மே தினத்தில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதியாக, உழைப்பை மதிப்போம், உழைப்பாளியை உயர்த்துவோம் எனக்கூறி, உழைக்கும் கைகள் உயர்ந்திட, உழைப்பின் குரல் ஒலித்திட, சமத்துவம் நிறைந்த சமூகத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைவோம். அனைவருக்கும் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பிலும், எனது சார்பிலும் ‘மே’ தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் வாழ்த்துக்களுடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

Back to News