நமது போற்றுதலுக்கும் பெருமைக்கும் உரிய டாக்டர் பாரிவேந்தர் ஐயா அவர்களின் வழிகாட்டுதலில் தொடங்கப்பட்ட நமது இந்திய ஜனநாயகக் கட்சியின் துவக்க நாள் இன்று... 28.04.2010 இந்த நாளில், கட்சியின் அடித்தளத்தை அமைத்த பாரிவேந்தர் ஐயா அவர்களின் தொலைநோக்கு சிந்தனை, தியாகம் மற்றும் அர்ப்பணிப்பை நாம் அனைவரும் நினைவு கூர வேண்டும். நமது கட்சி, பொதுமக்களின் நலன், சமூக நீதி, சமத்துவம் மற்றும் பெண்கள் முன்னேற்றம், விவசாயத்தில் விஞ்ஞானம் ஆகிய உயரிய இலக்குகளை முன்வைத்து பயணித்து வருகிறது. இந்த பயணத்தில் நம் நிர்வாகிகள், பொறுப்பாளர்களின் உறுதி, உழைப்பு மற்றும் ஒற்றுமை மிக முக்கியமானதாகும். இந்த சிறப்பான நாளில், ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும், பொறுப்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்.. ஐயா பாரிவேந்தர் அவர்கள் காட்டிய பாதையில் தொடர்ந்து செயல்பட்டு, கட்சியின் கொள்கைகள் மற்றும் இலக்குகளை மக்களிடம் கொண்டு சேர்ப்போம். இந்த சட்டமன்ற தேர்தலில் நம் கட்சி பொறுப்பாளர்கள் ஆற்றிய பணி மிகவும் பாராட்டத்தக்கது. நம் கட்சியின் வலிமையை எடுத்து காட்டியுள்ளது.ஒற்றுமையே பலம் மக்கள் சேவையே முதல் கடமை என்ற கொள்கையுடன் நாம் மேலும் உயர்ந்து – வளர்ந்து - சிறக்க எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.. வாழ்த்துக்களுடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)
Powered by iPOT Technologies