Loading...

செய்திகள்

Apr 27, 2026
News Image

நம் கட்சி பொறுப்பாளர்களின் உழைப்பும் நம்பிக்கையும் நமது கட்சியின் எதிர்காலத்தை மேலும் ஒளிமயமாக்கட்டும். இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் கட்சி தொடங்கிய நாள் வாழ்த்துச் செய்தி

value="நமது இந்திய ஜனநாயகக் கட்சியின் துவக்க நாள் இன்று. மகிழ்ச்சியும் பொறுப்பும் கலந்த ஒரு முக்கியமான தருணமாக நாம் கொண்டாடுகிறோம். இந்த நாள் ஒரு கட்சியை துவங்கிய நாள் மட்டுமல்ல, நமது கொள்கைகள் - கனவுகள் மற்றும் சமூகப் பொறுப்பை மீண்டும் உறுதி செய்யும் நாளாகும். இந்தக் கட்சி உருவானது அதிகாரத்திற்காக அல்ல, அது மக்களின் குரலாக, நல்லாட்சியை, விவசாய குடும்பத்தை சேர்ந்த ஒரு தமிழன் நாடாள வேண்டும் என்ற உயர்ந்த கொள்கையை நிலைநிறுத்தும் ஒரு இயக்கமாக உருவானது. கல்வி, சமத்துவம், இளைஞர் முன்னேற்றம், பெண்கள் முன்னேற்றம் மற்றும் சமூக உயர்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நமது பயணம் தொடங்கியது. இன்றைய தினத்தில், நான் உங்களிடம் பகிர விரும்புவது, இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். அரசியல் கற்றுக் கொண்டு ஒற்றுமையாக நடந்தால் எட்டாத இலக்கு இல்லை என்பதை நாம் உணர வேண்டும். நமது கட்சியின் வலிமை, நமது கட்சி கொள்கைகளில் இருப்பதைப் போன்று, உங்களின் ஒற்றுமை, ஒழுக்கம் மற்றும் அயராத உழைப்பு, உறுதியில்தான் இன்னும் அதிகளவு வலுப்பெற இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். நம் கட்சியில் உறுப்பினர்களே இல்லை. அனைவரும் பொறுப்பாளர்கள் தான். பொறுப்பாளர்கள் ஒவ்வொருவரும் இந்த IJK வின் தூண்கள். உங்கள் அர்ப்பணிப்பே நம்மை மக்கள் மனதில் உயர்த்துகிறது. இன்று நாம் கடந்த 16 ஆண்டு கால பாதைகளை நினைவுகூருவதோடு மட்டும் நிற்காமல், எதிர்கால இலக்குகளையும், கட்சியின் உயரிய வளர்ச்சியையும் உறுதியாக எண்ண வேண்டும். மக்கள் சேவையே உயர்ந்த சேவை என்ற நம்பிக்கையுடன், நாம் ஒன்றிணைந்து மேலும் பல சாதனைகளை நிகழ்த்துவோம். இந்த இனிய நாளில்,உங்கள் அனைவருக்கும் எனது அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன். உங்கள் உழைப்பும் நம்பிக்கையும் நமது கட்சியின் எதிர்காலத்தை மேலும் ஒளிமயமாக்கட்டும். வாழ்த்துக்களுடன், டாக்டர் பாரிவேந்தர் நிறுவனர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)"

Back to News