Loading...

செய்திகள்

Apr 19, 2026
News Image

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து இரங்கல்

விருதுநகர் மாவட்டம், கோவிந்தநல்லூர் - கட்டனார்பட்டியில் இயங்கிவரும் வனஜா பட்டாசு ஆலையில் இன்று 30 பேர் பணிபுரிந்த நிலையில், எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தில் 20 பேர் இறந்தும் மீதமுள்ளவர்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக படுகாயத்துத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் உள்ளனர் என்ற செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன். எதிர்பாரா இக்கோர விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கும் – உறவினர்களுக்கும் இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும் – வருத்தத்தினையும் தெரிவித்துக்கொள்கின்றேன். மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து அவரவர் இல்லம் திரும்ப இறைவனை பிரார்த்திப்பதோடு, தினசரி குடும்பத் தேவைக்காக பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் இவர்களின் குடும்ப வறுமையை கருத்திற்கொண்டு, வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் உரிய இழப்பீட்டினை வழங்க வேண்டும். மேலும், தொடர்ந்து நடக்கும் இதுபோன்ற கோர விபத்துக்களை தடுக்க, அனைத்து பட்டாசு ஆலைகளையும் தர ஆய்வு செய்து, உரிய வழிகாட்டுதல்களையும் - நெறிமுறைகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் தமிழக அரசினை வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம். வருத்தங்களுடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

Back to News