வசந்தகாலம் தொடங்குவதை தமிழ் மண்ணுக்கு எடுத்துக் கூறும் பொருட்டு சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு திருநாளாக கொண்டாடப்பட்டு வருகின்றது. உலகின் தொன்மையான பண்பாட்டிற்கு சொந்தக்காரர்களாக விளங்கியவர்கள் தமிழர்கள். கலை, பண்பாடு, அரசு நிர்வாகம், உலக அளவிலான வணிகம், வான சாஸ்திரம், கட்டுமான நுண்ணறிவு என அனைத்து துறைகளிலும் முன்னோடியாக விளங்கிய சிறப்புமிக்க தமிழர்களின் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில், பிரபவ’ ஆண்டில் தொடங்கி ‘அட்சய’ ஆண்டு வரை தமிழ் ஆண்டுகள் அறுபது என்ற இந்த வரிசையில், ‘விஸ்வாவசு’ ஆண்டு நிறைவடைந்து 40-வதாக, நாளை (14.4.2026) ‘பராபவ’ ஆண்டு தொடங்கவுள்ளது. கணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே - யாவரும் கேளீர்” என்ற பெருமை வாய்ந்த வரிகளுக்கு இணங்க, தமிழ் மக்கள் மற்ற இனத்தவரோடும் – மதத்தவரோடும், பிறமொழி பேசும் மக்களோடும் இணைந்து வாழ்ந்து, இந்தியாவிற்கு ஒரு எடுத்துக்காட்டாக வாழவேண்டும் எனக்கூறி, வளர்ச்சி, அமைதி, மகிழ்ச்சி மற்றும் வளமுடன் இந்த ஆண்டு அனைவருக்கும் மிகச்சிறப்பாக அமைய உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது சார்பிலும் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன். இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…! வாழ்த்துக்களுடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)
Powered by iPOT Technologies