Loading...

செய்திகள்

Mar 28, 2026
News Image

இந்திய ஜனநாயகக் கட்சியின் பல்லாவரம் சட்டமன்றத்தொகுதி வேட்பாளர் அறிமுகக்கூட்டம் SRM ஹோட்டல் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.

எதிர்கொள்ளவுள்ள 2026 சட்டமன்றத்தேர்லில், NDA கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பாக பல்லாவரம் சட்டமன்றத்தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடவுள்ள வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் Dr. V. வெங்கடேசன், M.A., M.L., Ph.D. அவர்களின் அறிமுகக்கூட்டம் காட்டாங்குளத்தூர் SRM ஹோட்டலில் கட்சியின் நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் மற்றும் தலைவர் இளையவேந்தர் டாக்டர் ரவிபச்சமுத்து ஆகியோரின் தலைமையில் இன்று மதியம் 1 மணிக்கு மதிய விருந்துடன் மிகச்சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் பல்லாவரம் – தாம்பரம் – செங்கல்பட்டு சட்டமன்றத்தொகுதிகளைச் சார்ந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும், அதிமுக மாவட்ட செயலாளரும் – தாம்பரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான சிட்லபாக்கம் ராஜேந்திரன், அதிமுக மாவட்ட துணைச்செயலாளர் Ex MLA தனசிங், பாமக மாவட்ட தலைவர் திரு.வெங்கடேசன், பாஜக மாவட்டத்தலைவர் திரு. ரகுமான், அமமுக மாவட்ட செயலாளர் கரிகாலன், புரட்சி பாரத மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், தமாக மாவட்ட தலைவர் வேணுகோபால், மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த பகுதி – ஒன்றிய - பேரூர் பொறுப்பாளர்கள் மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இங்ஙனம், தலைமை அலுவலகம் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

Back to News