தெலுங்கு புத்தாண்டான யுகாதி திருநாளை முன்னிட்டு அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகள். திராவிட கலாச்சாரத்தின் ஓர் அங்கமாக விளங்கும் தெலுங்கு மற்றும் கன்னட இன மக்கள் தங்களுடைய பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பேணிக்காத்து, அதேசமயத்தில் தமிழ் மக்களோடு ஒற்றுமையுடன் இணைந்து வாழ்ந்து வருகின்றனர். பேசும் மொழிகளால் வேறுபட்டிருந்தாலும் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம் மற்றும் கேரள மக்கள் கலாச்சாரத்தாலும், பண்பாட்டாலும் ஒருமித்த உணர்வோடு வாழ்ந்து வருகிறோம். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் கலாச்சாரம், பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கும், வளமான இந்தியாவை உருவாக்கவும் இணைந்து செயல்படுவோம். ஒற்றுமை, அன்பு மற்றும் மனிதநேயத்தை உயர்த்திப் பேணுவோம். சமூக முன்னேற்றத்திற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் அனைவரும் இணைந்து செயல்படுவோம். இந்த புது வருடம் உங்கள் வாழ்க்கையில் நலன், வளம், மகிழ்ச்சி மற்றும் அமைதியை கொண்டு வரட்டும். புதிய தொடக்கங்களுக்கும், உயர்ந்த இலக்குகளுக்கும் இது ஒரு சிறந்த தருணமாக அமையட்டும் எனக்கூறி, நாளை பிறக்கவுள்ள புத்தாண்டாம் ‘யுகாதி’ திருநாளைக் கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட சகோதர – சகோதரிகள் அனைவருக்கும், இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் இனிய ‘யுகாதித் திருநாள்’ நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்த்துக்களுடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)
Powered by iPOT Technologies