கட்சி நிர்வாகிகளுக்கு IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து அறிவிப்பு விரைவில் எதிர்கொள்ளவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம், நமது இந்திய ஜனநாயகக் கட்சி தனி சின்னத்தில் போட்டியிடவேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையத்திடம் கேட்டிருந்தபடி, தேர்தல் ஆணையம் நமது கட்சிக்கு மைக் (Mike) சின்னம் ஒதுக்கியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். தமிழகத்தில் தற்போது நிலவிவரும் லஞ்சம் – ஊழல் – போதை கலாச்சாரத்தை முற்றிலும் ஒழித்தெரியவும் – அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கவும், தமிழக மக்களுக்காக இந்திய ஜனநாயகக் கட்சி எப்போதும் துணை நிற்கும் என்பதனை உரக்கச் சொல்வதற்காக[வும் நமக்கு கிடைத்திருக்கின்றது இந்த மைக் சின்னம். தமிழகத்தின் 234 சட்டமன்றத்தொகுதிகளிலும் உள்ள மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் நமது கட்சியின் சின்னமான மைக் சின்னத்தை மக்களின் மனதில் பதியவைக்கவேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். உண்மையாகவும் – உறுதியாகவும் நமது கட்சியில் பயணிக்கும் ஒவ்வொரு நிர்வாகிகளுக்கும் இந்திய ஜனநாயகக் கட்சி எப்போதும் உறுதுணையாக நிற்கும் என்பதில் ஐயமில்லை. நமது நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் ஐயா அவர்களின் எண்ணத்திற்கேற்ப 2026 சட்டமன்றத் தேர்தல் நமக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்து, எதிர்காலத்தில் நாட்டின் தலைசிறந்த மாநிலம் தமிழகம் என்ற குரல் உலகெங்கும் ஒலிக்க நாம் அனைவரும் உறுதியாகவும் - நம்பிக்கையுடனும் பணியாற்றவேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். வெற்றி நமதே….!! வாழ்த்துக்களுடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)
Powered by iPOT Technologies