Loading...

செய்திகள்

Feb 25, 2026
News Image

எளிமை, நேர்மை, கொள்கை உறுதி ஆகியவற்றின் உருவாக இருந்த ஐயா நல்லகண்ணு அவர்கள், அரசியல் வாழ்க்கையில் ஒழுக்கத்திற்கும் தன்னலமற்ற சேவைக்கும் ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்தவர் அவரது மறைவு அரசியல் உலகிற்கும், சமூக நீதி இயக்கங்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து இரங்கல் செய்தி.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஐயா ஆர். நல்லகண்ணு அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த துயரம் அடைந்தேன். ஐயா அவர்கள் தனது முழு வாழ்நாளையும் ஏழை எளிய மக்களின் உரிமைகள், சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்கான போராட்டங்களுக்கு அர்ப்பணித்தார். எளிமை, நேர்மை, கொள்கை உறுதி ஆகியவற்றின் உருவாக இருந்த ஐயா நல்லகண்ணு அவர்கள், அரசியல் வாழ்க்கையில் ஒழுக்கத்திற்கும் தன்னலமற்ற சேவைக்கும் ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்தார். பல தலைமுறைகளுக்கு சிந்தனைத் தூண்டலாகவும், சமூகப் பொறுப்புணர்வை விதைத்த தலைவராகவும் என்றும் அவர் நினைவுகூரப்படுவார். அவரது மறைவு அரசியல் உலகிற்கும், சமூக நீதி இயக்கங்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். ஐயா நல்லகண்ணு அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தோழர்களுக்கும் மற்றும் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் மனமார்ந்த அனுதாபத்தையும் எனது சார்பிலும், இந்திய ஜனநாயகக் கட்சி சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன்.. வருத்தங்களுடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

Back to News