Loading...

செய்திகள்

Jan 27, 2026
News Image

இந்திய ஜனநாயகக் கட்சியின் மாநில மாநாடு சுற்றறிக்கை

அன்புடையீர், வணக்கம், நமது ஆணைக்கிணங்கவும் வழிகாட்டுதலின்படியும், உத்தமத்தலைவர் மாண்பமை வேந்தர் ஐயா அவர்களின் நமது தலைவர் இளையவேந்தர் அவர்களின் எதிர்வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி (08.02.2025) (ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் கடலூர் மாவட்டம், வேப்பூர் பாசார் பகுதியில் நமது இந்திய ஜனநாயகக் கட்சியின் மாநில மாநாடு மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளதை நீங்கள் அறிவீர்கள். நடைபெறவுள்ள இந்த வெற்றி மாநாட்டில், மாநில நிர்வாகிகள் மற்றும் சட்டமன்றத்தொகுதி மாவட்டத்தலைவர்கள் அனைவரும் மேடையில் அமரவைக்கப்பட உள்ளீர்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். மாநாட்டிற்கு வருகை தரவுள்ள பொறுப்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு மாவட்டத்தலைவர்களும் தலைமைக்கு அனுப்பியுள்ளீர்கள். அவ்வாறு அனுப்பியுள்ள பட்டியலில் மாவட்ட பொறுப்பாளர்களுடன் மாவட்டத்தலைவர்களும் அவர்களுடைய தனிப்பட்ட மேற்பார்வையில் பொறுப்பாளர்கள் மற்றும் நபர்களை அழைத்துவர பட்டியல் அனுப்பியுள்ளீர்கள். நீங்கள் மேடையில் அமரவைக்கப்பட உள்ள காரணத்தினால், ஒவ்வொரு மாவட்டத்தலைவரும் உங்கள் தனிப்பட்ட மேற்பார்வையில் கொடுத்துள்ள பொறுப்பாளர்களை முறையாக அழைத்து வந்து மாநாட்டுத் திடலில் அமரவைத்துவிட்டு அவர்களைக் கண்காணிக்க, மாற்று பொறுப்பாளரை நியமித்து செயல்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம். எனவே நீங்கள் நியமிக்கவுள்ள மாற்றுப்பொறுப்பாளரின் பெயர்பட்டியலை தலைமையிடம் கொடுக்குமாறு வேந்தர் ஐயா அவர்களின் ஆணைக்கிணங்க கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். முக்கியமாக, மாநாட்டுத் திடலில் தனித்தனியாக மாவட்டம் மற்றும் தொகுதி வாரியாக தாங்கள் அழைத்துவரக்கூடிய பொறுப்பாளர்கள் அமரவைக்கப்பட உள்ளதால், மாநாட்டினை சீறும் சிறப்புமாக நடத்தி முடித்து மிகச்சிறந்த வெற்றிமாநாடாக முடித்துவைக்கவேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. எனவே நீங்கள் கொடுத்துள்ள பட்டியலில் உள்ளவாறு பொறுப்பாளர்களை சரிபார்த்து அழைத்துவர உரிய முறையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Back to News