Loading...

செய்திகள்

Jan 28, 2026
News Image

மஹாராஷ்ட்ரா துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான திரு.அஜித்பவார் அவர்களின் மறைவிற்கு IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து இரங்கல்

மஹாராஷ்ட்ரா துணை முதல்வரும் – தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான திரு.அஜித்பவார் அவர்கள் மும்பை பாராமதியில் நடந்த விமான விபத்தில் இறந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும் – வேதனையும் அளிக்கின்றது. நீண்டகால துணை முதல்வர் – கேபினட் அமைச்சர் – 8 முறை சட்டமன்ற உறுப்பினர் – கூட்டுறவு சங்கத்தலைவர் – தேசியவாத காங்கிரஸ் தலைவர் என பலதரப்பட்ட பொறுப்புகளில் தனது அளப்பரிய பங்கினை அளித்த பெருமைக்குரியவர் என்பதோடு பொதுமக்களின் நலனுக்காக அயராது உழைத்தவர். அவரது மறைவு மகாராஷ்ட்ரா மாநிலத்திற்கே ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும். எதிர்பாராத இக்கோர விபத்தில் உயிரிழந்த திரு.அஜித்பவார் அவர்களின் குடும்பத்தாருக்கும் – உறவினர்களுக்கும் – கட்சி தொண்டர்களுக்கும் எனது சார்பிலும், இந்திய ஜனநாயகக் கட்சி சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். வருத்தங்களுடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

Back to News