கடந்த ஆண்டில் நாம் சந்தித்த சவால்கள், துன்பங்கள் அனைத்தையும் கடந்து, புதிய ஆண்டில் சமூக ஒற்றுமை, சமத்துவம், சமூகநீதி மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றை அடைய அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மக்கள் நலன், சமூக வளர்ச்சி, இளைஞர் முன்னேற்றம் மற்றும் பெண்களின் உரிமைகள் ஆகியவை உறுதியாக பாதுகாக்கப்படும் ஆண்டாக இந்த புத்தாண்டு அமைய வேண்டும். உழைக்கும் மக்களின் வாழ்வில் வளம் பெருகவும், விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் நல்ல ஆண்டாக மலரவும் வாழ்த்துகள் தெரிவித்து நாம் அனைவரும் அதற்காக ஒன்றாக பாடுபடுவோம். நாளை பிறக்கவுள்ள இனிய புத்தாண்டு, உங்கள் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் ஆரோக்கியம், அமைதி மற்றும் செழிப்பை வழங்கும் ஆண்டாக அமைய எனது சார்பிலும், இந்திய ஜனநாயகக் கட்சி சார்பிலும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் வாழ்த்துக்களுடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)
Powered by iPOT Technologies