கடந்த 27-ஆம் தேதி திருத்தணி ரயில் நிலையம் அருகே, நான்கு சிறார்கள் கஞ்சா போதையில் வடமாநில இளைஞர் சூரஜை அரிவாளால் வெட்டி கொடூரமாகத் தாக்கிய சம்பவம் மிகுந்த அதிர்ச்சியும் – மன வேதனையையும் அளிக்கின்றது. படுகாயமடைந்த வடமாநில இளைஞர் மேல்சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், நான்கு சிறார்களும் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்து, போதைப்பழக்கத்தால் எதிர்காலத்தை இழந்து நிற்கும் இளைய தலைமுறையினரின் நிலை கவலையளிக்கின்றனது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சமீப காலங்களாக அதிகரித்து வரும் ரீல்ஸ் மோகம், இப்போது கொலை செய்ய தூண்டும் அளவுக்கு சிறார்கள் சென்றிருக்கிறார்கள். கொடூர மனம் கொண்டவர்களாக சிறுவர்கள் மாறியதற்கு, பரவலாக்கப்பட்டு வரும் கஞ்சா, போதைப்பொருட்கள்தான் முக்கிய காரணம். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வதை தடுக்க, பரவி வரும் போதைப்பொருள் புழக்கத்தை தமிழக காவல்துறை தனது இரும்புக்கரம் கொண்டு அறவே ஒழிக்கவேண்டும். இளைஞர்கள் அதிக அளவில் போதைப்பழக்கத்திற்கும், மதுப் பழக்கத்திற்கும் ஆளாகி இருப்பது கொடுமையிலும் கொடுமை. இந்த போதைப்பொருள் பயன்பாடுகளைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கின்றேன். அன்புடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)
Powered by iPOT Technologies