Loading...

செய்திகள்

Dec 24, 2025
News Image

மனித வாழ்வில் நம்பிக்கை என்ற சக்தி வந்துவிட்டால் உலகில் முடியாதது என்று எதுவும் இல்லை என்பதனை அனைவரும் உணர ஆன்மீக ஒளியேற்றியவர் இயேசுபிரான் அவர்கள் IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து அவர்களின் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துச்செய்தி

ஏழைகளுக்கு விண்ணுலகம் சொந்தம் – கனிவுடையவர்களுக்கு நாடு சொந்தம் – தூய்மை உள்ளம் கொண்டவர்களுக்கே கடவுள் சொந்தம் என்ற உபதேசங்களையும் – கொள்கைகளையும் உலகிற்கு அளித்த இயேசுபிரான் அவதரித்த நாளை கிறிஸ்துமஸ் விழாவாகக் கொண்டாடுகின்றோம். தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்து, மக்களை நேசித்து – அவர்களுக்காகவே உயிர்த்தியாகம் செய்தவர் அண்ணல் இயேசுபிரான் அவர்கள். மனித வாழ்வில் நம்பிக்கை என்ற சக்தி வந்துவிட்டால் உலகில் முடியாதது என்று எதுவும் இல்லை என்பதனை அனைவரும் உணர ஆன்மீக ஒளியேற்றியவர் அவர். பாவங்களிலிருந்தும், தீமைகளிலிருந்தும் விலகி, நல்வழியில் பயணம் செய்ய அவர் வகுத்த பாதைதான் கிறிஸ்துவம். நமக்கு தீமை செய்யும் எதிரிகளுக்கும் இரக்கம் காண்பித்து, அவர்களை மன்னிக்கும் மாண்பினை உலகிற்கு எடுத்துரைத்து, அதைத் தன் வாழ்வின் இறுதிவரை கடைபிடித்தார். இந்த உலகம் அமைதிபெற வேண்டும் என அவதரித்த இயேசுபிரானின் பிறந்த நாளான இந்த நன்னாளில், வாழ்வில் ஏற்படும் அனைத்து துன்பங்களையும், நம்பிக்கையுடன் எதிர்கொண்டு, வாழ்வில் வெற்றிபெரும் வரை தொடர்ந்து போராட வேண்டும் எனக்கூறி, உலகெங்கும் வாழும் அனைத்து கிறித்துவ சகோதர – சகோதரிகளுக்கும் என் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். வாழ்த்துக்களுடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

Back to News