Loading...

செய்திகள்

Dec 23, 2025
News Image

சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வேண்டி போராடும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றவேண்டும் இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து வலியுறுத்தல்

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் குறைந்து சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜனவரி 1, 2023 ஆம் ஆண்டு இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பிரச்சனையை களைவதற்கு என அமைக்கப்பட்ட குழுவின் தற்போதைய நிலைப்பாடு என்னவென்றும் தெரியவில்லை இந்நிலையில், சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன்வைத்து இடைநிலை ஆசிரியர்கள் டிசம்பர் 26-ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளனர்.. ஆசிரியர்களின் கோரிக்கையை உடனடியாக தமிழக அரசு ஏற்க வேண்டும் என்பதோடு, அவர்கள் நடத்தவிருக்கும் போராட்டத்தை தவிர்க்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கின்றேன்.. அன்புடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

Back to News